கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!

கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும் அளித்துள்ளார்.

ஒரு சிவில் இன்ஜினியரான சேஷாத்ரி சிவகுமார், கேரளத்தின் சாத்தியமற்ற பருவநிலையில் காஷ்மீர் குங்குமப்பூவை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளார். இதுவொரு அசாதாரணமான பயணம் என்று சொல்லலாம்.

காலையில் 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் வழக்கமான அலுவலக வேலையிலிருந்து விலக நினைத்த சேஷாத்ரி, ஏரோபோனிக் விவசாயத்தின் பக்கம் கவனம் செலுத்தினார்.

கேரளாவின் வெப்ப மற்றும் ஈரப்பத வானிலையை கருத்தில்கொண்ட பலரும் அவரது புதிய திட்டம் பற்றி சந்தேகம் தெரிவித்தனர்.

பொதுவாக குங்குமப்பூ விவசாயத்திற்குத் தேவையான குளிரான பருவநிலையுடன் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது அவரது திட்டம்.

ஆனாலும் அவர் தன் சவாலை உறுதியுடன் ஏற்றுக்கொண்டார். முதல்கட்டமாக குங்குமப்பூ தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.

அடுத்து களத்தில் இறங்கிய சேஷாத்ரிக்கு விவசாயத்தில் பெரிய முன் அனுபவம் இருந்திருக்கவில்லை.

முதலில் 400 கிலோ கிராம் குங்குமப்பூ விதைகளுடன் தொடங்கி ரூ.10 லட்சம் ஆரம்ப முதலீட்டில் ஏரோபோனிக் விவாசய அமைப்பை உருவாக்கினார். 225 சதுர அடி பரப்பளவில், குங்குமப்பூ வளர்ப்புக்கேற்றச் சூழலை மிக நுட்பமாக உருவாக்கினார்.

குங்குமப்பூ வளர்ப்பில் குளிர்விப்பான்கள், ஈரப்பதமூட்டிகள் மற்றும் சிறப்பு விளக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்.

அவரது ஏரோபோனிக் அமைப்பு முழுமையான தானியங்கி மற்றும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது.

கேரத்தில் விவசாயிகள் ஆச்சரியப்படும் வகையில், குங்குமப்பூ வளர்ப்பில் சாதித்துக்காட்டினார் சேஷாத்ரி. ஓர் ஆண்டில் அவர் 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தார்.

பின்னர், அந்த அனுபவ அறிவை 100 பேருடன் பகிர்ந்து பயிற்சியளித்தார். மேலும் பலரும் குங்குமப் பூ விவசாயத்தில் ஈடுபட உதவியாக இருக்கிறது.

சேஷாத்ரியின் புதுமையான விவசாய அணுகுமுறை சவால்களை எதிர்த்தது மட்டுமல்லாமல், ஒரு புதுமையான திட்டத்தை செழிப்பான தொழிலாகவும் மாற்றியது.

இது மேலும் பலரை குங்குமப்பூவின் பக்கம் நம்பிக்கையுடன் இழுத்து வந்திருக்கிறது.

– தான்யா

Comments (0)
Add Comment