சிறைக்குள்ளும் தடுக்க முடியவில்லையா?

செய்தி:

புழல் சிறையில் செல்போன், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்.

கோவிந்த் கமெண்ட்:

தமிழ்நாடு முதல்வர் அடிக்கடி போதைப் பொருட்களைத் தடுக்கக் கோரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தாலும், போதைத் தடுப்புப் பிரிவு சுறுசுறுப்பாக செயல்படுவதாக சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது.

கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்டு அண்மையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்திருக்கிறார்.

சென்னை மாதிரி நகர்ப்புறங்களிலேயே கல்விக் கூடங்களுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்த செய்திகள் தொடர்ந்து அடிபடுகின்றன. 

இந்த நிலையில், புழல் சிறைக்குள்ளேயே செல்போன், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கி அந்தச் செய்தியும் ஊடகங்களில் வெளிவந்திருக்கிறது.

ஆக, அவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்ததாகச் சொல்லப்பட்ட புழல் சிறைக்குள்ளேயே கஞ்சா நடமாட்டம் இருக்கிறதென்றால், எவ்வளவு வீரியத்துடன் இருக்கிறது போதைப் பொருட்களின் புழக்கம்?

Comments (0)
Add Comment