வாசிப்பின் ருசி:
மல்லிகை தோட்டத்தில் பணியாற்றுபவர்களைக் கேட்டேன்,
வாசத்திலேயே உழவுவது எப்படி என்றும்,
கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும்,
“வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை” என்றனர்.
– கவிஞர் யுகபாரதி எழுதிய ‘முனியாண்டி விலாஸ்’ நூலிலிருந்து.