சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!

படித்ததில் ரசித்தது:

புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்தியவர் அவர்.

சுய முன்னேற்ற இயக்கத்தின் வழிகாட்டுதலில் தனது வாழ்க்கை லட்சியத்தை ஒரு கட்டளை வாக்கியமாக உருவாக்கி, 1969 ஜனவரியில் தனது 29 வயதில் டயரில் எழுதினார் புரூஸ்லீ.

“புரூஸ்லி ஆகிய நான், அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் ஆசிய சூப்பர் ஸ்டாராக உயர்வேன். 1970-ம் ஆண்டு முதல் நான் உலகப் புகழ் பெறுவேன். 1980-ம் ஆண்டுக்குள் 10 மில்லியன் டாலர் சம்பாதிப்பேன்” என்று எழுதினார்.

எழுதியதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார் புரூஸ்லீ.

சாதிப்பதற்கு எண்ணங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் புரூஸ்லீ தான். 

  • நன்றி : முகநூல் பதிவு
Comments (0)
Add Comment