பொருளாதாரத்தில் நசியும் டெல்டா மாவட்டங்கள்!

தமிழகத்தின் வடக்கு, மேற்கு பிராந்தியங்கள் மேலே உயர தெற்கு, கிழக்கு பிராந்தியங்கள் கீழே சரிகின்றன. ஈராயிரமாண்டுகளாக தமிழருக்குச் சோறிடும் காவிரிப் படுகை மாவட்டங்கள் பொருளாதாரத்தில் நசிகின்றன.

செங்கல்பட்டில் உள்ள ஒருவரது சராசரி ஆண்டு வருமானம் ரூ.6.8 லட்சம் என்றால், திருவாரூரில் உள்ள ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.1.48 லட்சம் ஆக இருக்கிறது.

மூன்றாண்டுகளுக்கு முன்னரே இந்த விஷயத்தின் தீவிரத்தை நான் தொடர்ந்து எழுதவும் பேசவும் செய்தேன். இப்போது அதையே தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பிளவு உருவாகிவருவதை அரசு வெளியிட்டுள்ள முதல் பொருளாதார அறிக்கை வெளிப்படுத்துகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையும், அது வெளிப்படுத்தும் கவலைக்குரிய அம்சங்களும் துரதிருஷ்டவசமாக ஊடகங்களில் உரிய கவனம் பெறவில்லை.

– பத்திரிகையாளர் சமஸ்

Comments (0)
Add Comment