விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன், சாமானிய மக்கள் நலன் சார்ந்தும், தொகுதியின் மேம்பாடு குறித்தும் மக்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் மக்களவையில் பேசிய முனைவர் தொல்.திருமாவளவன், இடம்பெயரும் பழங்குடி மக்கள் மற்றும் நாடோடி மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்தான தரவுகள் ஏதேனும் அரசிடம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சர் வெர்மா எழுத்துப்பூர்வமாக விடையளித்துள்ளார்.
அதில், “நாடு முழுவதும் 837 நாடோடி சமூகங்கள் இருப்பதாக சீர்மரபினர் மற்றும் நாடோடி மக்களின் தேசிய ஆணையம் 2017-ம் ஆண்டு கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது என்றும் இணைப்பு – 1ல் மாநில வாரியான பட்டியல் வழங்கப்பட்டுள்ளது என்றும் நாடோடி சமூகங்கள் வாரியாக, உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை” என்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்.