தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பாரா பிரதமர்?

செய்தி:     

வரும் ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் மோடி அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பான தகவலை அந்நாட்டு அதிபர் அநுரா குமார திசாநாயக்க உறுதி செய்துள்ளார்.

இந்த பயணத்தின்போது திருகோணமலை மாவட்டம் சம்பூர் மின்னுற்பத்தி நிலையக் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் என்கின்றனர். இதற்காக இலங்கை மின்சார வாரியமும் இந்திய தேசிய அனல்மின் கழகமும் இணைந்து பணியாற்ற உள்ளது.

கோவிந்த் கமெண்ட்:

பிரதமர் மோடி ஜி கடல் கடந்து போனால் ஆரவாரமாக வரவேற்று உபசரிக்கும் இலங்கை அரசு, ஏன் நம் தமிழக மீனவர்கள் கடல் எல்லையை நெருங்கினாலே அதிரடி காட்டி கைது செய்து, மீனவர்களை கெஞ்ச வைத்து பிறகு விடுவிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இலங்கை அரசிடம் பேசிவிட்டு வருவாரா நமது மோடி ஜி?

Comments (0)
Add Comment