மார்ச் – 20: உலக வாய்வழி சுகாதார தினம்:
அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை.
அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை.
ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக இருக்கிறது.
அருகில் வந்து பேசும் போது வாய் துர்நாற்றம் இல்லாமல், பற்கள் சீராகவும் இருந்தால் நம் மீது மதிப்பு மரியாதையும் ஏற்படுத்தும்.
சீரற்ற பற்களுடன், வாய் துர்நாற்றத்துடன் நாம் பேசும் போது நமது தன்னம்பிக்கை இழக்கிறது.
பலருடன் உரையாடும் போது மற்றவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே ஆடைக்கும், அழகுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல் வாய் மற்றும் பற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வாய் சுகாதாரம் இல்லை என்றால் உடலின் ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாகிவிடும்.
உலக வாய்வழி சுகாதார தினம் மார்ச் 20 ஆம் தேதி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் நோக்கம் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வாய்வழி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பொதுவாக உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் வாய் வழி நோய்களும் அடங்கும். வாய் புற்றுநோய், வாய் புண்,வாய் துர்நாற்றம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் கூறப்படுகிறது. உலகளவில் 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற நோய்கள் மற்றும் பிற இது தொடர்பான நோய்கள் 3.5 பில்லியனுக்கும் அதிகமானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
1990 மற்றும் 2019 க்கு இடையில், உலகில் வாய்வழி நோய்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 1 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
வாய் வழி நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும் என்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கம்.
அனைத்து மக்களும் ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தவும் உயர்ந்த வாய்வழி சுகாதார நிலையை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டு வரப்பட்டது.
வாய் சுத்தமாக வைத்து கொள்வது எப்படி?
வாய் சுகாதாரம் என்பது பற்களையும், ஈறுகளையும், நாக்கையும் சுத்தமாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஆகும்.
அதே போல் இரண்டு வேளை பல் துலக்குதல், பற்களில் இடையில் இருக்கும் உணவுகளை வெளியேற்றுதல், எண்ணெய் மற்றும் உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்தல் ஆகியவை உங்கள் வாய் பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இவை பல் சொத்தை மற்றும் ஈறுகளின் நோய்களைத் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வாய்வழி சுகாதாரம்
வாய்வழி சுகாதாரம் இல்லாமல் இருந்தால் பற்களுக்கும் வாய் மற்றும் பற்களின் பளபளப்பு மற்றும் ஈறுகளில் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
சுகாதாரம் இல்லாத வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பல் துலக்கும் முறை:
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது, பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி, பற்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
பல்லிடுக்குகளில் தங்கியிருக்கும் உணவுகளை சுத்தம் செய்வதன் மூலம் பற்களுக்கு இடையில் வரும் ஈறுகளின் வீக்கத்தை குறைத்து நோய்களைத் தடுக்க உதவுகிறது.
வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள்:
பல விதமான காரணங்கள் கூறப்படுப்பட்டாலும் முக்கியமாக பார்க்கப்பட்டது சுகாதரமற்ற பராமரிப்பு.
உடலில் நோய் தொற்று, சத்துக்குறைபாடு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அதேபோல், வைட்டமின் சத்து மற்றும் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை உள்ளவர்களுக்கு வாயில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
மேலும் வறட்சியான வாய் போன்ற காரணங்கள் இருக்கின்றன.
வாய் கொப்பளித்தல்:
காலையில் எழுந்தவுடன் வாயில் எண்ணெயை வைத்து சில நிமிடங்கள் கழித்து கொப்பளிக்க வேண்டும்.
இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைக்கவும், பல் சிதைவை தடுக்கவும், ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் சுடு தண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் வாயில் உள்ள கிருமிகளை அகற்றி, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது.
பல் மருத்துவரின் அறிவுரை:
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரை சந்தித்து, பல் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்தல் மூலம் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொல்லலாம்.
பல் தேய்க்கும் போது பற்பசையை சரியாக பயன்படுத்த வேண்டும். வாயை கொப்பளிக்கும் போது வாய் துர்நாற்றத்தை போக்கும் திரவத்தை பயன்படுத்தலாம்.
பல் தேய்த்த பிறகு வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
ஆகவே உலக வாய்வழி சுகாதார தினமான இன்று முதல் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுங்கள், புகையிலை மற்றும் மதுபானங்கள் முற்றிலும் தவிர்த்து, வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாப்பேன் என்று.
சத்தான பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாய்வழி சுகாதாரம் என்பது ஒருவரின் வாய்வழி குழியை சுத்தமாகவும் வைத்துக் கொள்வது ஆகும்.
இவை நோய் மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவும்.
– யாழினி சோமு