கண்ணகி நகர் பெண்களுக்கு ஆட்டோ வசதி!

வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் பெருமிதம்

தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு ஐஏஎஸ் ஏற்பாட்டில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் வாழும் ஏழை எளிய பெண்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ‘முதல் தலைமுறை’ அறக்கட்டளை வழங்கிவருகிறது.

கடந்த மாதம் ஓட்டுநர் பயிற்சியை நிறைவு செய்த மாலதிக்கு தனியார் நிறுவனம் மூலம் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டோவை எந்தவித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டது.

கடந்த 11 ஆம் தேதியன்று தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருந்த இறையன்பு அவர்களை தனக்கு வழங்கப்பட்ட புதிய வாகனத்துடன் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார் மாலதி. அப்போது அந்த வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடன் சுற்றிவந்தார்.

முதல் பயணத்திற்கான ஆட்டோ கட்டணத்தை இறையன்பு வழங்க, அதை நினைவுப்பரிசாக பாதுகாக்க இருப்பதாக மாலதி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மாலதியின் முயற்சியை பாராட்டி, மேலும் சிறப்பாக செயல்பட ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

கண்ணகி நகர் பகுதி பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இறையன்பு வழங்கிவருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 520 பெண்கள் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள்.

இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்திற்கான அடிப்படைத் தேவைகளை சொந்த உழைப்பின் வழியாக பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

Comments (0)
Add Comment