வாசிப்பின் ருசி:
சொற்கள் தான் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கிற பேராயுதம். சொற்களை வீசி எப்பேற்பட்ட பலசாலியையும் சாய்க்க முடியும். மரத்தை வெட்டிச் சாய்க்கிற மாதிரி, மலையை வெட்டி சாய்க்கிற மாதிரி, மன உறுதியையும் வெட்டி சாய்க்க முடியும் வார்த்தைகளால்.
– நாராயணி கண்ணகி எழுதிய ‘அலர்’ நாவலிலிருந்து…