நூல் அறிமுகம்: மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும்
நாம் மிக அதிகமாகப் புரிந்து வைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கும் நமது மனதைப் பற்றி உண்மையில் நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம்.
மனதினைப் பற்றி நாம் கொண்டிருக்கும் சொற்பமான புரிதலும், கோட்பாடுகளும் கூட நிறைய நேரங்களில் தவறாகவே இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையின் துயரங்களுக்கும், தீவிர மனச்சோர்வுக்குமான வித்தியாசம் என்பது நுட்பமானது. அதை உணரும்போது மட்டுமே நாம் அதற்கான தீர்வைத் தேடிப் போக முடியும்.
மனச்சோர்வின் பல்வேறு வெளிப்பாடுகளை, அதன் காரணங்களை, அதற்கான தீர்வுகளை, அதன் மேல் உள்ள கற்பிதங்களை விரிவாக அலசுகிறது இந்த நூல்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வழியாக மனம் தொடர்பாகவும், மனச்சோர்வு தொடர்பாகவும் சில புரிதல்களை ஏற்படுத்துவதும், அது சார்ந்த சில கதவுகளைத் திறந்துவிடுவதும்தான் நோக்கமாகக் கொண்டு எழுதியிருக்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பு மனச்சோர்வு தொடர்பான ஒரு எளிமையான புரிதலை நிச்சயம் ஏற்படுத்தும். மனம் பற்றியும், மனநலம் பற்றியும், மனநோய்கள் பற்றியும் இங்கு எழுதப்படும் எந்த ஒரு எழுத்தும் அந்த எழுத்தாளனின் தனிப்பட்ட கருத்தை மையப்படுத்தியே இருக்கும். ஆனால் இந்த நூல் அறிவியல் தளத்தில் நின்று அதன் அசலான உண்மைகளை பேசுகிறது.
****
நூல் : மனச்சோர்வு கற்பிதங்களும் உண்மைகளும்
ஆசிரியர்: சிவபாலன் இளங்கோவன்
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.67/-
பக்கங்கள்: 80