ஒரு புகைப்படம் எத்தனைக் கதைகளை எழுதிச் செல்கிறது!

சென்னை, அண்ணா நகர் வி.ஆர். மகாலில் ஜனவரி மாதத்தில் நிகழ்ந்த ‘வானேறும் விழுதுகள்’ புகைப்படக் கண்காட்சியில் இந்த ஓவியத்தைப் பார்க்கையில் ஒரு பெருந்திறப்பு ஏற்பட்டது.

இலக்கியம் ஒரு பெண்ணின் கூந்தலை வைத்து எத்தனை புனைக் கதைகளை எழுதியிருக்கிறது.

தும்பியே! நீ தேன்நாடி உண்ட பூக்களில் இந்தப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையெனும் உளவோ? என்கிறது குறுந்தொகை.

பாஞ்சாலி சபதம் பாரதியின் வரிகளில் “பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்
பாழ்த் துரியோதனன் யாக்கு ரத்தம் மேவி இரண்டும் கலந்தே குழல்
மீதினில் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யார் இது செய்யுமுன்னே முடியேன்” என்றுரைத்தாள்!

கூந்தலை அவிழ்த்து போடாதே வீட்டுக்கு ஆகாது என்கிறது பழமொழி.

கணவன் இறந்து விட்டால் பெண்கள் முடியை மழிப்பது பண்டைய சில சமூகங்களின் வழக்கமாக இருந்தது.

கூந்தலுள்ள மகராசி கொண்டையும் போடுவா.. அவுத்தும் போடுவா.. என்ற பலமொழிகளும் உள்ளன.

சங்கக் காலத்தில் கூந்தலின் வேறு பெயர்கள்.
அளகம், கூந்தல், பித்தை, முச்சி, ஓதி, கூழை, கதுப்பு, குழல் போன்றவை.

சங்க கால மகளிர் கூந்தலை ஐந்து வகையாக வகைப்படுத்தி உள்ளனர். அவை – முடி, சுருள், குழல், பனிச்சை, ஐம்பால்.

ஐந்து பகுதிகளாக மகளிர் அலங்காரம் செய்யப்படுவதால் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர்.

கூந்தலை உச்சியில் கூட்டி முடிந்தால் அதற்கு முடி என்று பெயர்.

கூந்தலை பக்கவாட்டில் முடிந்தால் அதற்கு கொண்டை என்று பெயர்.

கூந்தலை பின்னிச் சொருகினால் அதற்கு சுருள் என்று பெயர்.

கூந்தலைச் சுருட்டி முடிந்தால் அதற்கு குழல் என்று பெயர்.

கூந்தலை சடையாக பின்னி விட்டால் அதற்கு பணிச்சை என்று பெயர்.

இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது பெண்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பண்பாடுகளும் குல வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையும் மனமும் வெளிப்படுகிறது.

ஒரு புகைப்படம் எத்தனைக் கதையை எழுதி செல்கிறது.

நன்றி: வசந்த பாலன் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment