படித்ததில் பிடித்தது:
“பெற்றோர் தங்கள் மகன்களைவிட, மகள்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
மகள் – மகன்களுக்கும் இடையிலான சமத்துவம் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும்.
பாலியல் சமத்துவம், பெண்களிடம் ஆண்கள் எவ்வாறு மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த நெறிமுறைகளைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்.
பள்ளிகளில் முறையான ஒழுக்கக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை. சில பள்ளிகளில் இருந்தாலும், அந்த வகுப்பு நேரத்தை வேறு பாடங்கள் எடுக்கப் பயன்படுத்துகின்றனர்.” என உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, தனது ஆதங்கத்தை சமூகவலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.