1. எந்த வயதிலும் எழுதத் தொடங்கலாம். தொடர்ந்து எழுதுகிறீர்களா என்பதுதான் முக்கியம்.
2. எழுத்தாளராவதற்குத் தமிழ் எழுதத் தெரிந்தால் போதும். கல்லூரி படிப்பு தேவையில்லை.
3. எழுத்து ஒரு கலை. எழுத்து ஒரு கைவினை. தொடர்ந்த பயிற்சியின் மூலமாக நீங்கள் அதில் சிறந்து விளங்க முடியும்.
4. அதிர்ஷடவசமாக உலகின் மாபெரும் எழுத்தாளர்கள் எழுதுவது எப்படி என்று நமக்குச் சொல்லிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களைப் படிப்பதின் மூலமாக அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்.
5. படிப்பு படிப்பு என்று இருக்காவிட்டால் உங்களால் எழுத முடியாது.
படிப்பதுதான் எழுத்தாளராவதின் முதல் படி. எழுதுவதற்காக படிப்பது என்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
6. எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துத் திருத்துங்கள். மாபெரும் எழுத்தாளர் டால்ஸ்டாய் தனது “போரும் வாழ்வும்” நாவலை எட்டு முறை திருத்தி எழுதினார்.
ஒரு வார்த்தை போதும் எனும் இடத்தில் இரண்டு வார்த்தைகள் வேண்டாம்.
8. எழுதத் தொடங்கும்போது இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று வரையறுத்துக் கொள்ளுங்கள்.
9. அபூர்வமான விஷயங்களைச் சொல்வதற்கு சாதாரணமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
10. எழுதுவதில் மொழி அழகு மட்டும் போதுமானது அல்ல. உங்கள் மொழியினால் என்ன சொல்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
11. நீங்கள் சொல்லும் விஷயம் தெளிவு, புதிய பார்வை, வாசகனோடு தொடர்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
12. எழுதத் தொடங்கும்போதே ஒரு தவறில்லாமல் எழுதி விட வேண்டும் என்று நினைக்காதீர்கள்.அப்படிநினைத்தால் ஒரு வார்த்தைகூட எழுத முடியாது.எழுதி எழுதிதான் திருத்த வேண்டும்.
13. எழுத்தாளனாக வேண்டும் என்று நினைத்தால் மட்டும் எழுத்தாளனாகி விட முடியாது.எழுதி எழுதிப் பார்க்க வேண்டும்.
14. நீங்கள் திருத்தி எழுத வேண்டும் என்றால் ஏதாவது ஒன்றை நீங்கள் எழுதி இருக்க வேண்டும். எதுவும் எழுதாமல் இருக்கும் வெற்றுப் பக்கத்தை நீங்கள் எப்படி திருத்த முடியும்?
15. வேலை செய்வதற்கான செயல் திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளுங்கள்.
16. நீங்கள் எழுதுவதை ஒருநாளைக்கு இத்தனை பக்கம் அல்லது இத்தனை வார்த்தைகள் என்று நிர்ணயித்துக் கொள்வது உங்கள் எழுதும் கலையை வேகப்படுத்துவதுடன் கவனக் குவிப்பையும் உருவாக்கும்.