உதயநிதி, அண்ணாமலை – சவால்கள்!

மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகி வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில்…

கேள்வி:  உங்கள் வீட்டை முற்றுகையிட்டு, போஸ்டர் ஒட்டுவேன் என்று கூறுகிறாரே?

துணை முதல்வர் உதயநிதி பதில்:- வரச்சொல்லுங்கள், நான் வீட்டில்தான் இருப்பேன். ஏற்கனவே, அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என்றார். அவருக்கு தைரியம் இருந்தால், அண்ணாசாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

கேள்வி:- நடிகர் விஜய், திருமாவளவன் போன்றவர்கள் தனியார் பள்ளிகள் நடத்துவதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறாரே?

துணை முதல்வர் உதயநிதி பதில்:- தனியார் பள்ளிகளை சட்டவிரோதமாகவா நடத்துகிறார்கள்?. மத்திய அரசிடம் அனுமதிப் பெற்று பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அதனால், அதையும், இதையும் ஒப்பிடாதீர்கள். தனியார் பள்ளியில் காலை உணவும், பள்ளிச் சீருடையும் இலவசமாக வழங்குகிறார்களா?. இல்லையே? அதனால், தயவு செய்து ஒப்பிடாதீர்கள்” என்றார்.

இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பதிலில், “மும்மொழி கொள்கையில் தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர். அண்ணாசாலைக்கு நான் தனியாக வருகிறேன். உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடியாக சவால் விடுக்கிறேன். நான் கும்பமேளா சென்று வந்த பிறகு நேரம், தேதியைச் சொல்லுங்கள். அண்ணாசாலைக்கு நான் வருகிறேன். தொண்டர்கள் இல்லாமல் தனி ஆளாக வருகிறேன். உதயநிதி ஸ்டாலின் வரத்தயாரா? தி.மு.க. மொத்த படை, போலீஸ் துறையை வைத்து தடுத்து நிறுத்தி பார். நான் சொன்னதில் இருந்து பின்வாங்க போவது இல்லை.

நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ‘கெட் அவுட் மோடி’ என்று டுவீட் போடுங்கள். நானும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று பாருங்கள்.

தி.மு.க.ஐ.டி. விங்கிற்கு சவால் விடுகிறேன். 24 மணி நேரம் தருகிறேன். பா.ஜனதா மற்றும் தி.மு.க. 2 கட்சிகளும் போடும் டுவீட்டில் எவ்வளவு வித்தியாசம் என்று நாளை மறுநாள் கணக்கு பார்ப்போம்.

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே போதைப்பொருட்கள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். அதற்கு மக்கள் வாய்ப்பு கொடுப்பார்கள்” என்று கூறினார்.

இது தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Comments (0)
Add Comment