மரண தண்டனைக்கு எதிரான மாயாண்டியின் கடிதம்!

நூல் அறிமுகம்: ஊருக்கு நூறுபேர்!

நாடு முழுவதும் இருந்து நூறுபேர் கொண்ட இயக்கமாக உருவெடுத்து, இன்று மாநிலத்துக்கு நூறு பேர் என விரிவடைந்துள்ளது. இவ்வியக்கம் மாவட்டத்துக்கு நூறுபேர், ஊருக்கு நூறுபேர் என உருவெடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் அனைத்து நிலைகளிலும் இவ்வியக்கம் சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். ஒரு நாள் இந்த தேசத்தைக் கைப்பற்றிவிட்டோம் என உலகத்திற்கு அறிவிக்க வேண்டும் என இயக்கத்தின் தலைவர் ஆனந்தன் அவர்களிடம் முழங்கிக் கொண்டிருந்தார்.

போராட்டம், புரட்சி எனும் பற்றுள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கோவிந்தசாமி, அவரின் மகள் ருக்கு மற்றும் விநாயகத்துடன் இணைந்து ‘போராட்டம்’ பத்திரிகையை நடத்திவரும் ஆனந்தன், எழுத்தின் வழியே சமூகப் புரட்சிக்கு வித்திட முயற்சிக்கிறார்.

‘போராட்டம்’ பத்திரிகையின் வழியே மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி மரண தண்டனைக்கு எதிராக தொடர் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

இந்நிலையில் மரணதண்டனை கைதி மலையாண்டியிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

மலையாண்டி யார்? ஏன் கொலை செய்தார், அவரின் குடும்ப பின்புலம் என்ன? கொலை செய்யப்பட்ட அர்ச்சகரின் குடும்பம் என அனைவரையும் சந்தித்து தகவல் சேகரித்து பத்திரிக்கையில் சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதவும், மரணதண்டனை ஒழிப்பு இயக்கத்திற்கு ஆதரவாக அனைவரிடமும் கையெழுத்து வாங்கி ஆளுநர் அவர்களுக்கு அனுப்புவது, மலையாண்டியின் மரண தண்டனையை ரத்து செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஆனந்தனுக்கு, மலையாண்டிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அதிர்ச்சி தகவல் வந்தடைகிறது.

மலையாண்டி கடிதத்தில் கூறியிருந்தவாறு, ஆனந்தன் ‘ஊருக்கு நூறுபேர்’ இயக்கத்தில் சேருகிறார். வேறு பெயர்களில் கட்டுரைகள் எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறார். ருக்மணி ‘போராட்டம்’ இதழை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இனி…
‘ஊருக்கு நூறுபேர்’ இயக்கத்தை தொடர்ந்து மனதில் வளர்த்து பார்க்கலாம்…

– பா.தங்கம்.

நூல்: ஊருக்கு நூறுபேர்!
ஆசிரியர்: ஜெயகாந்தன்
மீனாட்சி புத்தக நிலையம்
விலை: ரூ.86/-
பக்கங்கள்: 96

Comments (0)
Add Comment