பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!

நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்!

ச. தமிழ்செல்வன் எழுதிய ‘பெண்மை என்றொரு கற்பிதம்’ என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம்.

பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம் இயற்கையில் வந்தவையா? நாகரிக சமூகமாக மனிதன் வாழத்தொடங்கிய பின் கட்டமைக்கப்பட்டவையா?

பெண்மையின் லட்சனங்களாக நம் பொதுப்புத்தியில் உறைந்து கிடப்பவற்றில் எவையெல்லாம் உயிரியல் ரீதியானவை.

எவையெல்லாம் பண்பாடுத் தொழிற்சாலைகளால் நம் மனங்களில் அழுத்தி ஊன்றப்பட்டவை? என்பதே நூலின் மையக் கரு.

சமூக, கலாச்சார, மத அடிப்படையிலான கட்டுப்பாடுகள் பெண்களை எப்படி உருவாக்குகின்றன, அவர்கள் வாழ்க்கை முறைகளில் அவை எப்படி செயல்படுகின்றன என்பதைக் குறித்து நூல் விரிவாக விவாதிக்கிறது.

பெண்ணியம், பாலியல் அரசியல், குடும்ப அமைப்பு, திருமணக் கலாசாரம் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

பெண்களின் நிலையை பார்ப்பதற்கான புதிய கோணங்களை முன்வைப்பதால், ஒரு பாரம்பரிய சமூகத்தில் வாழும் நமக்கு இது ஒரு சிந்தனை எழுப்பும் நூலாக இருக்கும்.

ஒவ்வொரு வாசகரும் புத்தகத்தை முடித்தவுடன், சமுதாய கட்டமைப்புகளை மறுபரிசீலனை செய்யத் தோன்றும்.

புத்தகம் சிலருக்கு கடுமையாக தோன்றலாம், ஏனெனில் இது பாரம்பரிய கருத்துக்களுக்கு எதிரானதாக இருக்கும். ஆனால் அது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கலந்துரையாடல்களைத் தூண்டும்.

பெண்ணியத்தைக் குறித்து ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்பினால், இது கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்!

*****

நூல்: பெண்மை என்றொரு கற்பிதம்!
ஆசிரியர்: ச. தமிழ்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.72/-
Comments (0)
Add Comment