எல்லாக் கலைகளும் மனிதனை இன்னும் மேன்மைப்படுத்த உருவானவை தான். அதில் பரதத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள் பேரார்வத்தோடு நாட்டியக் கலைப் பயணத்தைத் துவக்கியுள்ளோம்.
30.01.2025 அன்று சிறிய இனிமையான பயணம் ஒன்றை டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரி நடனத்துறை மாணவர்கள் அனைவரும் மேற்கொண்டோம்.
இந்த பயணம் அனைவர் மனதிலும் நீக்காத இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
நடனத்துறையில் 4ம் ஆண்டு பயிலக்கூடிய, இத்தாலியைப் பிறப்பிடமாக கொண்ட மாணவி செல்வி. ஹேனா லாரா சியுக்கா அவரின் வேண்டுகொளுக்கு இணக்க, நடனத்துறையில் பணியற்றக்கூடிய பேராசிரியர்களின் உதவியோடு இந்த மனதை வருடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரிக்கு அருகில் உள்ள பெசண்ட் நகர் தியோபிசிக்கல் சொசைட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த இடத்திற்கு உள்ளே நுழையும்போதே எல்லோர் மனதிலும் ஒரு வகையான அமைதி நிலவியது.
மிகவும் அமைதியான இயற்கைச் சூழல் நிறைந்த இடம்.
அந்த இடத்தின் கிளை, உலகம் முழுவதும் பரவி இருக்கிறது என்பதை, அங்கு தொங்க விடப்பட்டுள்ள தேசியக் கொடிகளின் மூலமும், பணியற்றக்கூடிய தலைவர்களின் பேச்சின் மூலமாகவும் காணமுடிந்தது.
அங்கு எங்களோடு கலந்துரையாடிய ஒரு நிர்வாகி, அந்த இடத்தின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
“இங்கு, ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பழமையான ஆலமரம் இருக்கிறது.
இதன் வேர்கள் பல திசைகளில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைச் சரியாக மதிப்பிடக்கூட முடியவில்லை” எனும் கருத்தை முன்வைத்தார்.
இந்தியாவில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான மரம் இது என்பது பெருமைக்குரிய ஒன்றுதான்.
புகழ்பெற்ற நடனக் கலைஞர், சதிர் எனும் நடனத்திற்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டவர், கலாஷேத்ரா என்ற புகழ்பெற்ற நடனப் பள்ளியை நிறுவியவர், பத்ம பூசண், சங்கீத நாடக அகாடமி கூட்டாளர் எனும் பல்வேறு விருதுகளுக்கு உரியவர் திருமதி. ருக்மணி தேவி அருண்டேல் அவர்கள் வாழ்த்து மறைந்த இடம் இதுவாகும்.
அவர் இந்த இடத்தில் தான் அவருடைய அரக்கேற்றமும் நாடத்தினார் எனும் தகவலையும், அவர் ஆடிய மேடையையும், அவர் வாழ்ந்த வீட்டையும் கட்டினார்கள்.
அந்தத் தருணம் என் வாழ்வில் மறக்க முடிய நினைவாகப் பதிவாகியது. எல்லோருக்கும் அதே உணர்வு தோன்றியது என்பதை தோழிகளின் பேச்சின் மூலம் தெரிந்துகொண்டேன்.
ருக்மணிதேவி அருண்டேல் எல்லா உயிரினங்கள் மீது அன்பு செலுத்தியவர். உயிரினங்களுக்காகச் சட்டம் இயற்ற உதவியர்.
இவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, அடுத்து அங்குள்ள இயற்கைச் சுழலுக்கு மத்தியில் அமைத்துள்ள புத்த விகார் பகுதியையும் பார்வையிட்டேம்.
அந்த இடம் மிகவும் அமைதியாகவும், மயில் போன்ற உயிரினங்கள் நடனமாடக்கூடிய வண்ணப் பூக்கள் நிறைந்த தாமரைக்குளம் அமைந்த அழகிய இயற்கைச் சூழலாகவும் காணப்பட்டது.
அந்த இடம் எனக்கும், சக மாணவர்களுக்கும் மனதிற்கு நெருக்கமான இடமாக மாறிவிட்டது.
காலையில் அந்தப் பருவத்திற்கே உரிய குறும்புகளுடன் துவங்கிய பயணம், மாலையில் நிறைவடையும் போது மிகுந்த மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் முடிந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பார்வையிட்ட ஒரு நிறைவான மனதுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதே நினைவோடு அங்கிருந்து மெல்ல நகர்ந்தோம்.
– தனுஷா