புரட்சிக்கு வித்திட்ட தமிழும் கலையும்!

அருமை நிழல்:

தனது படைப்புகளில் சிந்தனைமிக்க கருத்துக்களைப் பொதித்து வைத்தவர் புரசிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகளும் உரைநடையும் இளைஞர்களை எழுச்சிபெறச் செய்தன.

இதேபோல் தான் தனது நடிப்பின் மூலம் சமூகக் கருத்துகளைப் பரப்பியவர், கலைவாணர் எனப் போற்றப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். நகைச்சுவைக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்தார் கலைவாணர். அதனால் தான் அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

பெரியார் பாசறையில் இருந்து வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் பகுத்தறிவுப் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

சினிமா மூலம் நல்ல கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷங்கள் குறித்து கேள்வி கேட்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா. அப்படி புரட்சிமிக்கக் கருத்துக்களைப் பரப்பியவர்கள் ஒன்றிணைந்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட படம் இது.

குறிப்பு: இடமிருந்து வலமாக – நடிகவேள் எம்.ஆர்.ராதா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்,  காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் ராம. ராமநாதன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோர்.

நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி முகநூல் பதிவு

Comments (0)
Add Comment