ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர்.

அந்தக்குழு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வு வழங்கக்கூடாது என, பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து, அந்த அதிகாரி, சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மனுவில், “தன் தரப்பு விளக்கத்தைத் தெரிவிக்க, எந்த வாய்ப்பும் வழங்காமல், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டதால், அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதும், விரும்பத்தகாத செயல்களை செய்வதும், ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலே என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, விசாகா குழு அளித்த பரிந்துரைகள் செல்லும் என்றும் கூறினார்.

#பாலியல்_தொல்லை #விசாகா_குழு #தொழிலாளர்_நல_நீதிமன்றம் #பாலியல்_துன்புறுத்தல் #பெண்கள் #chennai_high_court #women #sexual_harassment #பணியிடம் #சென்னை_உயர்நீதிமன்றம்

Comments (0)
Add Comment