திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!

‘ஸ்கரப்டைபஸ்’ எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் இறந்தனர்.

இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு சிலர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

புதிதாக சிலருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த வாரத்தில் மட்டும், எட்டு பேர் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கிருமி நாசினி தெளிப்பது, சுற்றுப்புறங்களை துாய்மையாக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment