பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும் பார்வை!

வாசிப்பின் ருசி:

பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பவை, வெறும் புத்தகங்கள் இல்லை; யாரோ சிலரின் நினைவுகள்; அவை நமக்கு ஒன்றை உணர்த்துகின்றன. காலம் இரக்கமற்றது. அதற்கு, விருப்பமான மனிதர்கள் என்றோ விருப்பமான புத்தகங்கள் என்றோ பேதமில்லை. இரண்டும் பயனற்றவையாகத் தூக்கி எறியப்படவே செய்யும்.

ஆனால், எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை இருக்கிறது. யாரோ ஒருவருக்கு அது வாசித்து முடித்த பழைய புத்தகம். இன்னொருவருக்கு அது இப்போதுதான் வாங்கியுள்ள படிக்காத புதிய புத்தகம் . உறவுகளும் அப்படித்தான் தொடர்கின்றன.

  • எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘வீடில்லா புத்தகங்கள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.
Comments (0)
Add Comment