திண்டுக்கல்ல பத்தி என்ன நினைச்சீங்க?

சொந்த ஊரைப்பற்றி பேசிய லியோனி

எம்.ஜி.ஆர். முதல் முதலா அதிமுகவைத் துவக்கினப்போ இங்கே ஆளை நிறுத்தி ஜெயிக்க வைக்கலாம்னு நினைச்சார். பாருங்க… ஏதோ திண்டுக்கல்லில் போய் முதல் முதல்லே நின்னம்னா ஜெயிச்சுப் புடலாம்னு… வந்த பல பேர் மண்ணைக் கவ்விட்டாங்க. அந்த அளவுக்குச் சுரணையுள்ள ஊர் இது.

டிக்கெட் சேர்க்கிறதுக்கா கண்டக்டர்களும், புரோக்கர்களும் அதிக வறட்சியாயிடுச்சுன்னா டிரைவர்களும் சேர்ந்து குரல் கொடுக்கிற சத்தம், மர்ர.. மர்ர.. மார.- மர்ர.. (மதுரை), தீச்சி.. தீச்சி.. (திருச்சி) பன்னி.. பன்னி.. (பழனி)-ன்னு வேகமாகக் குரல் கொடுக்கும்போது வேற மாதிரிக் காதில் வந்து விழுற சுகம்.

“இஞ்சி மறப்பா.. முறுக்.. முறுக். கேய்..” சவுண்ட். கார்த்திகை மாதம் பிறந்துட்டா.. பாதயாத்திரை, வர்ற ஐயப்ப முருகன் பக்தர்கள் காலெல்லாம் புண்ணாகி நடக்க முடியாமத் தத்தித்தத்தி நடந்து வர்ற காட்சிகள் எல்லாத்தையும் வீட்டிலேயிருந்தே பார்த்துப்புடலாம்.

திண்டுக்கல்லில் ஒரு காலத்தில் தண்ணிப்பஞ்சம் இருந்ததால், “செக்கிற்கு மாடு கொடுத்தாலும், திண்டுக்கல்லுக்குப் பொண்ணைக் கொடுக்கக் கூடாது”ன்னு ஒரு பழமொழி.

எவ்வளவு இளக்காரம் பாருங்க.. அதாவது திண்டுக்கல்காரனுக்குப் பொண்ணு கொடுத்தா.. தண்ணி எடுத்தே நம்ம பொண்ணு காலியாயிடும்னு நினைப்பு.. விடுவாங்களா இங்கே உள்ள பொண்ணுங்க. பானைகளை வைச்சு மறியல் நடத்தியே ஊருக்குள்ளே தண்ணியை வரவழைச்சிட்டாங்க.. சாது மிரண்டிருச் சுன்னா காடு கொள்ளுமா?

ஆனா.. ஒண்ணுங்க.. எங்கேயாவது படத்திலே குங்குமம் கொட்டுது, புளியமரத்தில் சாமி தெரியுது, தலையில்லாத முண்டம் ஒரு மாதிரி அலையுதுன்னு யாராவது சொன்னா தலையில் ஆணியடிச்ச மாதிரி நம்புவாங்க. பிறகு உண்மை தெரிஞ்சதும் அப்படியா.. ஹி.. ஹின்னு அசடு வழிவாங்க.

– ஒரு வார இதழ் சார்பாக வெளிவந்த தென் மாவட்ட சிறப்பிதழ் ஒன்றில் திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புகளைப் பற்றி லியோனி பேசியவை.

Comments (0)
Add Comment