மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!

வாசிப்பின் ருசி:

மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது.

தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள்.

இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை, விளக்குத் திரி எரிவதை… என இயற்கையில் ஒவ்வொரு நற்கூறுகளையும் உங்களுக்குள் நிரப்பிக் கொள்ளுங்கள்.

நவீனத்தின் நெரிசல்களுக்கு இடையிலும்கூட நீங்கள் அந்த உன்னதங்களை எப்படியாவது கண்டடைய வேண்டும்.

இவ்வாறு நீங்கள் வாழ்க்கையை அணுகும்போது உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் அதிலிருந்தே பதில் கிடைத்துவிடும். அப்பொழுது, மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வாக மலரும்.

– மசானபு ஃபுகோகா

Comments (0)
Add Comment