அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அதற்கான பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகை கட்டடத்தின் உள் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. 1985ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள் அரங்கில் நடப்பது இதுவே முதல்முறையாகும். ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அதோடு, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக ஒபாமா, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஜோ பைடன், துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். மேலும் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்டு ட்ரம்புவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் அவரை வரவேற்றார். ட்ரம்ப்க்கு முன்னதாக, அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ட்ரம்ப்வும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர்களுக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது ட்ரம்புக்கு பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
பதவியேற்ற பின்னர் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இதுவரை இல்லாத வலுவான அமெரிக்காவை கட்டமைக்க உள்ளேன் என்றும், துப்பாக்கிக் கலாச்சாரம் ஒழிக்கப்படும் என்றும் சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பேசினார்.
இதனிடையே, அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியப் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புடின் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#டொனால்டு_ட்ரம்ப் #கமலா_ஹாரிசு #Donald_Trump_Inauguration #Trump_Inauguration_Speech #President_Trump #Golden_Age_of_America_Starts_Now #kamala_harish