மன நிறைவை ஏற்படுத்திய மதிப்புமிக்க ஆளுமை!

முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர் மாண்புமிகு திரு எம் அருணாச்சலம் அவர்களின் 21 வது நினைவு நாள் இன்று  (21.01.2025) அனுசரிக்கப்படுகிறது.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

முன்னாள் பிரதமர்கள் மாண்புமிகு திரு ராஜீவ் காந்தி, திரு நரசிம்ம ராவ், திரு தேவகவுடா, திரு ஐகே குஜ்ரால் ஆகியோர் அமைச்சரவையில் தொழில்துறை, நகரப்புற மேம்பாட்டு துறை, தொழிலாளர் நலத்துறை, உரம் மற்றும் ரசாயனத் துறை, ஆகியவற்றில் ராஜாங்க அமைச்சராகவும் பின்பு கேபினட் அமைச்சராகவும் பணியாற்றியவர்.

காங்கிரஸ் தலைவர் அமரர் திரு கருப்பையா மூப்பனார் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும் அன்பிற்கு பாத்திரமான மூத்த தலைவர். நெல்லை மாவட்டத்தில் மதிப்புறு அடையாளங்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவர் முன்னாள் சபாநாயகர் திரு எஸ் செல்லப்பாண்டியன் அவர்களின் அன்பிற்கு பாத்திரமான பண்பாளர்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்புமுனை உண்டு. அந்த திருப்புமுனை இவரால் நிகழ்ந்தது. இன்றைய சமூகத்தில் எனக்கு உயரிய அடையாளத்தை வழங்கியதில் அவருக்கு மாபெரும் பங்கு உண்டு.

காவல்துறை பணியில் துவக்கத்திலிருந்து முரண்பாடுகளோடு பணியாற்றிய காலத்தில் அரசுப் பணிகளில் உயர் பதவிகளுக்கான வாய்ப்புகள் நிறைந்திருந்தாலும் அதற்கான தேர்வுகளின் வெற்றி அடைவது மிகவும் எளிதானது என்றாலும் கூட அந்த வாய்ப்புகளை நிராகரிகத்து விட்டு,

சட்டம் பயின்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேண்டும் என்று சட்டம் பயின்று காவல்துறையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கருதி கொண்டிருந்த காலத்தில் இவருடன் ஏற்பட்ட நட்பு என்னை வேறு தளங்களில் பயணிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

1980-களில் இருந்து அவருடன் இருந்த நட்பு பின்னாளில் அவரது விருப்பத்திற்கு இணங்க தமிழகம் வரும் காலங்களில் அவருடன் பாதுகாவல் அதிகாரியாக உடன் இருந்த காலத்தில்,

குறிப்பாக, 1989 – ராஜபாளையம் சட்டமன்றத் தேர்தலில் அவரோடு பணியாற்றிய போது அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட சூழலில், அவருடன் உடன் நின்று அதை எதிர்கொண்ட விதம் அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது.

அன்று என்னுடன் இருந்த அரும்புகள் அறக்கட்டளையின் தற்போதைய இயக்குனரும் பணி நிறைவு பெற்ற நேரு கேந்திரா மாநில ஒருங்கிணைப்பாளருமான மதிவாணன் அந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

1991இல் காவல்துறை பதவியை தலைமுழுகி விட்டு வழக்கறிஞராக பணியாற்ற முடிவு செய்த போது, ஒன்றிய அரசு பணிக்கு அவருடன் பணியாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு அளித்தார்.

முன்னாள் சபாநாயகர் ஆன எனது பெரியப்பா திரு செல்லபாண்டியன் அவர்களிடம் இது குறித்து தெரிவித்திருந்தார்.

அவர் என்னை அழைத்து, நீ அவருடன் செல்வது தான் சரி. இப்போது பணியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

அவரது மருமகன் மற்றும் எனது அக்காவின் கணவருமான திரு மலைச்சாமி அவர்கள் “உள்துறை செயலாளராக இருந்தாலும் ஒன்றிய அமைச்சருக்கு செயலாளராக செல்வதற்கு அரசு விதிகளில் இடம் உண்டு, ஆகவே நீ வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறி விட்டார்.

அந்த முடிவை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

எனது மாமா உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் டெல்லியில் இருந்ததால் அவரும் என்னை டெல்லிக்கு வா என்று கூறிவிட்டார்.

உலகமயப் பொருளாதாரம் வேறொரு வடிவம் எடுத்திருந்த காலத்தில் அவரோடு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை சிறுதொழில் மற்றும் ஊரக வேளாண்மைத் தொழில் துறை, தொழிலாளர் நலத்துறை போன்ற முக்கிய அமைச்சர்களில் பணியாற்றிய அந்த நாட்களில் கற்றவை ஏராளம்.

அரசுக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் மூலம் எவ்வாறு செயல் வடிவம் பெறுகிறது, அதற்கான சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது போன்ற எண்ணற்ற தகவல்களும் பல்வேறு வகையான மனிதர்களை கையாளும் கையாளும் விதம் போன்றவற்றில் மிகப்பெரிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை நல்கியது.

எனது இயல்பான அறிவுத் தேடல், சமூகம், அரசியல் குறித்த எனது கொள்கைகள், குறுகிய காலத்தில் நிர்வாக ரீதியாக, அவற்றைப் புரிந்து கொள்வதற்கும் தளம் வைத்துக் கொடுத்தது.

அடுத்த நாள் பணியில் சேர வேண்டும். முதல் நாள் அவர் இல்லத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு கூறுகிறேன்

Are you happy to continue in this assignment Balu

My reply :

Definitely sir

You have identified me recognized me and rewarded me with the position to have greater exposure and learning sir

He said
You deserve for that

My reply
Thank you for your choice of my candidature sir. I would like to add my little statement sir

He said
It seems that You are learning to talk like a politician.

I said

Not like that sir. Tomorrow I am not supposed to speak sir

He said
Why

My reply
If I speak that tomorrow I consider that it would be a breach of protocol.

I am aware of my boundaries sir

He smiled Ok continue

I said
Sir Hope you don’t mind that I am little sensitive.

He said
No . You are more sensitive I am aware of it

I said
Thank you sir .With your permission I am telling sir

He said Ok

Please don’t mistake me sir. Your gesture of displeasure is enough for my departure.

He laughed and told that
That will never happen.

இதை நினைவு கூறுவதின் அவசியம் அவருக்கும் எனக்குமான நட்பின் ஆழத்தையும் நம்பிக்கை பற்றிய ஒரு சிறு குறிப்பு.

நான் சுயமரியாதை மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவன் என்பதை அவர் நன்கறிவார்.

அவர் தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்து நின்ற சிபிஎம் கட்சியின் வேட்பாளர் திரு கிருஷ்ணன்.

தேர்தல் காலங்களில் என்னிடம் பேசும்போது உங்க ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்பார். எனக்கு எப்படி சார் தெரியும்.

தனிப்பட்ட முறையில் எவரிடமும் எந்த தொடர்பும் இல்லை.

அருணாச்சலம்

தேர்தல் அன்று நான் மதுரை சென்று எனது நண்பர் மோகன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிய போது சிரித்துக் கொள்வார்.

அவரை சந்திக்க வரும் நண்பர்களிடம் என்னுடன் பேசுவது போல பாலுடன் பேசாதீர்கள். உங்களுக்கு வேண்டியதை அனைத்தும் செய்து கொடுப்பார்.

அவருக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறிவிடுவார். அதற்குப் பின்னால் பல அர்த்தங்கள் இருக்கும்.

சிலர் என்னிடம் வந்து நீங்கள் அமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். ஆகவே இதை நீங்கள் அவரிடம் கூறினால் நலமாக இருக்கும் என்று கூறுவார்கள்.

அவர்களிடம் நான் கூறுவது It is a fact that I am nearer to minister. That doesn’t mean that I am close up to him. I can only put forth the genuuity of your issue. It is prerogative to take any decisions on that matter.

இதை நான் அவரிடம் கூறியிருக்கிறேன். அமைச்சர் என்ற முறையில் அவருடன் அதிகமாக மற்றவர்களின் முன்னால் ஆங்கிலத்தில் உரையாடுவது பின்பு தனியாக இருக்கும் போது தான் அவரிடம் தமிழில் பேசுவேன்.

அவர் கூறுகின்ற முறையில், என்ன விரும்புகிறார் என்பது அவரது முகபாவணையில் இருந்து என்னால் புரிந்து கொள்ள முடியும்.

அவரது தனிச் செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி திரு குர்னிகால் சிங் பிர்சாதா அவர்களும் நானும் மிகவும் மிக நெருங்கிய நட்பில் இருந்தோம். அவரை நான் அஞ்சா நெஞ்சன் பஞ்சாப் சிங்கம் என்று அழைப்பேன்.

பல்வேறு தரப்பு மக்களுக்கு பல்வேறு உதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கியவர். அவரோடு இருந்த காலங்கள் குறித்து ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதுவதற்கு செய்திகள் உண்டு.

பணியில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் என்னை அழைத்து, அம்மா எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டார்.

நான் மதுரையில் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அவருடன் எப்படிப் பேசுவீர்கள் என்று கேட்டார்.

பக்கத்து வீட்டில் தொலைபேசி இருக்கிறது அங்கு அழைத்துப் பேசுவேன் என்று கூறினேன்.

எனக்குத் தெரியாமல் மற்றொரு உதவியாளரை அழைத்து அந்த முகவரிக்கு ஒரு தொலைபேசியை தனது கோட்டாவில் இருந்து அனுமதித்திருந்தது பின்பு எனக்கு தெரியும்.

நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது, I never askee sir. அதற்கு அவர் I know that is your nature. That is why I told Rao.

என்னை சென்னை குடிபெயர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தார்.

1998 இல் தேர்தல் தோல்விக்கு பிறகு 2000ம் ஆண்டு கொடைரோடு தோட்டம் ஆரம்பித்து இருக்கும் பொழுது சென்னையில் இருந்து வரும் பொழுது கொடை ரோட்டில் இறங்கி தோட்டத்தில் காலை உணவு அருந்திவிட்டு ஊருக்கு செல்வார்.

அப்போது கூட இந்த தோட்டத்தை விற்றுவிட்டு தென்காசியில் தோட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிக் கொண்டிருந்தார்.

வேளாண்மை தொடர்பாக எங்கள் இருவருக்கும் பல உரையாடல்கள் உண்டு.

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் சந்தித்தபோது எனது கைகளைப் பிடித்துக் கொண்டு Don’t worry Balu. I will be alright. Be prepared for your next assignment with me. I would like to keep you in a prime position.

நான் அவரிடம்,
This is not the time to speak sir . Your health is our priority. That is the only concern now.

அவரிடமிருந்து விடை பெற்று வந்து இரண்டு நாட்களில் நான் நெல்லை வந்தபோது 21/1/2004 அவரது மறைவு குறித்த செய்தி கிடைக்கப்பெற்றேன்.

அவரது நெருங்கிய நண்பர் ராஜபாளையம் திரு ராஜேந்திரன் ராஜா அண்ணாச்சி மற்றும் புளியங்குடி அந்தோணிசாமி ஆகியோருடன் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தேன்.

அவரின் இழப்பு அவரது குடும்பத்திற்கும் நட்பு வட்டாரத்திற்கும் மக்களுக்கும் பேரிழப்பு.

அவர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் பத்தாண்டுகள் ஐக்கிய முன்னணி அரசியல் மூத்த அமைச்சராக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருப்பார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தது.

அவரது மறைவிற்குப் பிறகு நான் காவல்துறையிலிருந்து முற்றிலும் விலகி, அந்நியப் பணியில், குறிப்பாக ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வங்கி மற்றும் நிதி சேவைத்துறை சார்ந்த கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடன் மீட்பு அதிகாரியாக பணியாற்றி,

கடைசி மாதம் காவல்துறைக்கு வந்து பணி நிறைவு பெற்று, பின்பு பாரத ஸ்டேட் வங்கியில் மோசடிக் கண்காணிப்பு ஆலோசகராகப் பொது மேலாளர் நிலையில் பணிபுரிந்தேன்.

இவை அனைத்தும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களால் உருவானது.

அவருக்குப் பின்பு வாய்ப்புகள் இருந்தும்கூட நான் எந்த அமைச்சருடன் பணியாற்ற விரும்பவில்லை.

தமிழ் பாலன்

அவரால் கிடைக்கப்பட்ட நட்பு வட்டம் மிகப்பெரியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் முதல் தொழில் முனைவோர்கள், தொழிற்சங்கம் சார்ந்தவர்கள், அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள், முதல் சாதாரண குடிமக்கள் வரை எல்லோரிடமும் அன்புடன் பழகும் வாய்ப்பு அவரால் கிடைத்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் இன்று வரை நட்பு தொடர்கிறது.

சாதி, மதம் கடந்த, பொருளாதார உயர்வு தாழ்வு கடந்த, மனிதநேயம் மட்டுமே வாழ்வின் விழுமியுங்கள் என்று கருதிய ஆளுமைகளோடு பயணித்தது வாழ்க்கையில் என்றும் நிறைவு.

இவற்றுக்கு அடித்தளம் அமைத்த மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு எம் அருணாச்சலம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.

எனது மாமா முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மற்றும் அமைச்சர் அருணாச்சலம் போன்ற ஆளுமைகள் மற்றும் சில பெரிய மனிதர்களிடம் இருந்து கற்றவை பல்கலைக்கழகங்களில் பல்வேறு பட்டங்கள் பெற்றதை விட அதிகம்.

உலகின் மிகப்பெரிய அறிஞர்களும் தத்துவ ஞானிகளும் கூறிய பல்வேறு கருத்துக்களில் சிறு துளிகளுக்கும் குறைவாகவே நாம் அறிந்திருக்கிறோம் என்பது எனது கருத்து.

எனினும் வாழ்க்கையில் கற்ற அனுபவச் செறிவுகளையும் நேர்மறை எண்ணங்களையும் நன்னெறிகளையும் வரும் தலைமுறை அறிந்து கொள்வது நலம் பயக்கும் என்பதால் காலம் வரும்போது பதிவுகளை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டுள்ளேன்.

காலம் வரும்போது அது நிறைவேறும் என்று கருதுகிறேன்.

– தமிழ் பாலன்

Comments (0)
Add Comment