உலகின் அமைதியான அறை…!

அமைதியான அறை என்று சொன்னதும் யாரும் இல்லாமல் தனியாக அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த அறை இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை.

என்னதான் அமைதி விரும்பிகளாக இருந்தாலும் இந்த அறைக்குள் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என்கிறார்கள். அப்படி என்னதான் இருக்கு, அந்த அறையில் வாங்க பார்ப்போம்.

அனெகோயிக் அறை (Anechoic chamber) என்ற சொல்லப்படும் இந்த அறை 1950-களின் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த அறையை முழுமையாகக் கட்டி முடிக்க ஒன்றை வருடங்கள் ஆனதாகச் சொல்லப்படுகிறது.

ஆறு அடுக்குகளும் சிறந்த ஒலி எதிர்ப்பு பொருட்களும் கொண்டு கட்டப்பட்ட இந்த அறை அமெரிக்காவில் வாஷிங்டன் என்னும் இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் தலைமையகத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

இது சுற்றுலா தளமாக இயங்குவது மட்டுமல்லாமல் உலகின் மிக அமைதியான அறை என உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த அறைக்குள் சென்றவுடன் நமது இதயத் துடிப்பை ஸ்டெதஸ்கோப் இன்றி நாமே கேட்க முடியுமாம்.

மேலும், நாம் சுவாசிக்கும் சத்தம் நம் கைகால்களை அசைக்கும் பொழுது எலும்புகளில் ஏற்படும் உறைவுகளின் சத்தம் ரத்த ஓட்டத்தின் சத்தம் போன்றவற்றை கேட்க முடியும் என சொல்லப்படுகிறது.

சாதாரணமாக ஒரு மனிதனின் செவியின் டெசிபல் 70. ஆனால் இந்த அறையின் டெசிபில் – 20 ஆக உள்ளதால் தான் இது போன்று நம் உடலில் உள்ள சிறிய அசைவுகளின் சத்தத்தைக் கூட நம்மால் கேட்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறைக்குள் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருப்பவர்களின் மனநிலை பாதிக்கப்படுவதாகவும் ஆலோசினேஷன் என்று சொல்லப்படும் மாயத் தோற்றங்கள் தென்படுவதாகவும் அங்கு சென்று அனுபவம் பெற்றவர்களால் சொல்லப்படுகிறது.

இப்படி ஒரு அமைதியான இடத்தை உருவாக்கியதற்கான காரணம் எலக்ட்ரானிக் உபகரணங்கள் வயர்லெஸ் சாதனங்கள் மற்றும் ஆன்டனாக்கள் போன்ற சாதனங்களை சோதிப்பதற்காகவே என்பது குறிப்பிடத்தக்கது.

– V.சங்கீதா

Comments (0)
Add Comment