கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து!

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76-ஆவது வயதில் மரணமடைந்தார். பிரிட்டனைச் சேர்ந்த இவர், ‘கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு புகழ்பெற்றவர்.

விஞ்ஞானத் துறையில் ஆய்வு செய்ய கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக இருந்தார் அவர்.

கடவுளின் இருப்பு, பூமியில் வாழும் மனிதர்களின் முடிவு மற்றும் வேற்று கிரக மனிதர்களின் (ஏலியன்களின்) இருப்பு போன்ற முக்கியமான விடயங்களின் மீது விஞ்ஞானத்தின் கோணத்தில் இருந்து அவர்கள் சொன்ன கருத்துகள் வித்தியாசமானவை.

இதுபோன்ற கடுமையான கருத்துகளுக்காக மத அமைப்புகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார் ஹாக்கிங்.

கடவுள் பற்றி ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் கருத்து என்னவாக இருந்தது என்பது பற்றிப் பார்ப்போம்.

“ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடிப்பதைப் பற்றி பேசும்போது, நமது சூரிய மண்டலத்தின் சமன்பாடு மற்றும் கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.

நமது சூரியனைச் சுற்றாமல் வேறொரு சூரியனை சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய கிரகம் 1992-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு உதாரணத்துடன் புதிய கண்டுபிடிப்பு பற்றி ஹாக்கிங் கூறியது இதுதான்: “ஒரு சூரியன், பூமி மற்றும் இந்த இரண்டிற்கும் இடையிலான தூரம், சூரியனின் நிறை என நமது சூரிய மண்டலத்தின் வானியல் கூட்டமைப்பு தற்செயலானது என்பதையே இந்த கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

மனிதர்களை மகிழ்விப்பதற்காக பூமி மிகவும் கவனமாக இருந்ததை நம்புவதற்கு தேவையான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.”

பிரபஞ்சம் உருவாவதற்கு காரணம் ஈர்ப்புவிசை விதியே என்று அவர் திடமாக தெரிவித்தார்.

ஹாக்கிங் கூறுகிறார், “ஈர்ப்பு விதிகளின் காரணமாக பிரபஞ்சம் சுயமாகவே பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஒருமுறை தொடங்கலாம். நமது இருப்புக்கும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கும் பொறுப்பு திடீரென்று நிகழும் வானியல் நிகழ்வுகள்தான், இதற்கு கடவுளின் அவசியம் தேவையில்லை.”

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இந்த கருத்துக்கு கிறித்துவ மத குருக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

நன்றி: பி.பி.சி

#scientist_Stephen_Hawking #இயற்பியல்_விஞ்ஞானி_ஸ்டீஃபன்_ஹாக்கிங் #கருந்துளை_மற்றும்_சார்பியல் #மனிதர்கள் #பூமி #கடவுள் #god #human #earth

Comments (0)
Add Comment