மனிதர்களாக வாழுங்கள்…!

மக்கள் திலகத்தின் மகத்தான வாழ்த்து

மரியாதைக்குரிய மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எங்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தி பேசும்போது,

“மணமக்களாகிய நீங்கள் இருவரும் காந்தியாரும் – கஸ்தூரிபாய் அம்மையார் போலவோ, வள்ளுவரும் – வாசுகி அம்மையார் போலவோ, ராமனும் – சீதையும் போலவோ வாழ வேண்டும் என்று நான் விரும்பவில்லை, மனிதர்களாக வாழுங்கள், அது போதும்” என்று வாழ்த்தினார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவுரை வழங்கியதுபோல் மனிதர்களாக வாழத்தான் இன்னும் முயன்று கொண்டிருக்கிறோம்!

தகவல்: கலைவாணரின் மகன் என்.எஸ்.கே.நல்லதம்பி.

Comments (0)
Add Comment