ஊர் சுற்றிக் குறிப்புகள்:
ஜனவரி பிறந்து சென்னையில் புத்தகக் காட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் வேறு சில கலாச்சார நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் லலித் கலா அகாடமியின் சில மூத்த ஓவியர்களின் கண்காட்சி. அதற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள் திரைக் கலைஞரான சிவகுமாரும் ஓவியரான மணியம் செல்வனும்.
பெரும்பாலும் வாட்டர் கலர் பாணியிலான ஓவியங்களை வரைந்திருந்த அரங்கில், தமிழகத்தில் உள்ள பல எழுத்தாளுமைகளை ஓவியங்களாக வடித்து வைத்துள்ளனர். பிரபலமான ஓவியர் சுந்தரம் முருகேசன் ஓவியங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஓவியங்களைப் பார்த்து அவரிடம் பாராட்டு தெரிவித்த சிவகுமார், அங்கு வைக்கப்பட்டிருந்த பல தர ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியரிடம் ஓவிய நுட்பம் குறித்தும் விவரிப்போடு பாராட்டினார். மணியம் செல்வனும் பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை மாநகர இரைச்சலுக்கு இடையே இப்படி இயற்கையோடு இணைந்த மாதிரியான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதே தனி அழகு தான்.
– யூகி