சூழல் பிரச்சனைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள்!?

நூல் அறிமுகம்: ரொம்ப கெத்தான ஆளா நீங்க?

ஜீயோ டாமின் எழுதிய “ரொம்ப கெத்தான ஆளா நீங்க?” என்னும் புத்தகம், எளிய மொழியில் சூழல் குறித்த முக்கிய விஷயங்களை நமக்கு விளக்குகிறது. 29 கட்டுரைகளால் ஆன இந்த புத்தகம், ஒவ்வொரு கட்டுரையிலும் சூழலியல், சமூகநீதி மற்றும் சுரண்டல்களை வெவ்வேறு கோணங்களில் நம்முன் பரப்புகிறது.

சூழல் அநீதிகளை ஆழமாக புரிந்துகொண்டு, அதற்கெதிராக செயல்பட வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறார்.

தனிநபர் மாற்றங்கள் மட்டும் போதாது; பெரிய அளவிலான மாற்றங்களும் அவசியம் என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பெரு முதலாளிகளும் தொழிற்சாலைகளும், அதிக லாபத்துக்காக உலக வளங்களை சுரண்டி, நம் சூழலுக்கும் சமூகத்துக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறார்கள்.

இதன் விளைவாக, சூழல் பிரச்சனைகளால் அதிகமாக பாதிக்கப்படுபவர்களும், பலியாகுபவர்களும் எப்போதும் விளிம்பு நிலை மக்கள்தான்.

சூழல் நீதி என்பது சமூக நீதியுடனே தொடர்புடையது என்பதை புத்தகம் வலியுறுத்துகிறது.

நம்முடைய தேவைகளையும், நம்முடைய வாங்குதல் பழக்கங்களையும் நிர்ணயிப்பது பெரு முதலாளிகளின் லாப நோக்கங்கள்தான் என்ற உண்மை தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

தனிநபர் மாற்றங்களுடன் சேர்த்து, அரசாங்கங்களையும் கேள்விக்குள்ளாக்கி, சூழல் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்பதே புத்தகத்தின் முக்கியத் தலையாய விஷயம்.

மேலும், இந்தப் பெரு முதலாளிகளின் கட்டற்ற உற்பத்தி வெறியையும், சுரண்டல்களையும் கட்டுப்படுத்தி, மனிதர்களின் நலனுக்காகவும், பூமியின் நலனுக்காகவும் செயல்பட வேண்டிய அவசியத்தை எழுப்புகிறது.

இந்த புத்தகம் நம் கருத்துப் போக்கில் மாற்றம் கொண்டு வரும்தான். சூழல் நீதி பாதையில் நம்மையும் அசைவு செய்ய இதைப் படிக்க மறக்காதீங்க!

*****

நூல்: ரொம்ப கெத்தான ஆளா நீங்க?
ஆசிரியர்: ஜீயோ டாமின்
காலநிலைப் பதிப்பகம்
விலை: ரூ.300/-

#romba_gethana_aala_neenga_book #jio_damin #ரொம்ப_கெத்தான_ஆளா_நீங்க?_நூல் #_ஜியோ_டாமின்

Comments (0)
Add Comment