எம்.ஜி.ஆர்: விமர்சனமற்ற சில குறிப்புகள்!

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே, அவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் போக்குதான் இன்றைக்குச் சில எழுத்தாளர்களிடம் நிலவுகிறது.

அப்படியானால், உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!

பெரியாருக்கு மட்டுமின்றி மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டுவிழா கொண்டாடியது எம்.ஜி.ஆர். அரசு தான்.

சுத்தானந்த பாரதி உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை, மாவட்ட நூலகத் துறைக்குத் தனி அலுவலர்கள், அவர்களுக்கு ஓய்வூதியம் – இதெல்லாம் அளிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான்.

தமிழக அரசின் ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணையிட்டதோடு, அரசின் மடல்கள், செய்திக் குறிப்புகள் போன்றவற்றில் திருவள்ளுவர் ஆண்டைப் பதிவு செய்ததும் எம்.ஜி.ஆரின் செயற்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆர். எழுத்தாளர் இல்லை; கண்டுபிடிப்பாளர் இல்லை. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் அவரது ஆட்சி எண்ணற்ற பயனும், வளமும் தந்தது என்பதை மறுக்க முடியாது.

நன்றி: செ.இளவேனிலின் ‘அரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு?’ எனும் கட்டுரையிலிருந்து.

Comments (0)
Add Comment