மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது.

ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை, மைலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது.

ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக் கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “இதுபோன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. மிகவும் பெருமையாக இருக்கிறது. கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குரிய விசயம்.

இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இந்த நிகழ்ச்சி தொடரவேண்டும் என்னுடைய ஆதரவும், பங்களிப்பும் எப்போதும் உண்டு. நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பா.இரஞ்சித் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.

Comments (0)
Add Comment