தமிழ்நாட்டில் தமிழில் பாடுங்கள்!

படித்ததில் ரசித்தது:

1941-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ‘தமிழிசை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் நோக்கமே, இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பதாக இருந்தது.

அதற்காகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்ப் பாடல்களைப் புனைவோருக்கு ரொக்கப்பரிசுகள் அறிவிக்கப்பட்டன. பெரியார், அண்ணா, பி.டி.ராஜன் போன்றோர் “தமிழ்நாட்டில் தமிழில் பாடுங்கள்” எனப் பல இடங்களில் வலியுறுத்திப் பேசினர்.

– நன்றி: முரசொலி

#தமிழிசை_மாநாடு #தமிழ் #தமிழ்ப்_பாடல்கள் #தமிழ்நாடு #பெரியார் #அண்ணா #பி_டி_ராஜன் #அண்ணாமலை_பல்கலைக்கழகம் #இசை_நிகழ்ச்சிகள் #periyar #perarignar_anna #language #tamil #annamalai_university #p_t_rajan #tamilisai_manadu #tamil_songs #tamilnadu 

Comments (0)
Add Comment