நூல் அறிமுகம் : முன்மொழிகள்!
அன்பு நண்பர் காதல் சுகுமார் அவர்கள் நடிகர் என்று பலருக்குத் தெரியும். அவர் சிறந்த படிப்பாளி. வாழ்க்கை மீது உயர்ந்த பார்வை கொண்டவர். அவர் முன்மொழிந்திருக்கும் இந்த நூலுக்கு பெயர் ‘முன்மொழிகள்’.
ஓரிரு வரிகளில் அழகிய தரிசனங்களை தரக்கூடிய மிக முக்கியமான நூல்.
பிறந்தநாள் திருமண நாள் போன்றவற்றுக்கு பரிசளிக்க உகந்த நூல்.
உதாரணத்திற்கு சில…
‘வயது முதிர்வதைப் பற்றி கவலைப்படாதீர்கள். பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.’
‘அரசியல்வாதிகளின் கண்களுக்கு அனைத்து வீடுகளுமே ‘ஓட்டு’ வீடுகள் தான்’.
‘காலத்தின் மசக்கை தீராதது… அது மனித சாம்பலை தின்று கொண்டே இருக்கிறது.’
‘பிறரால் வெறுக்கப்படுவதற்கு நாம் ஏதாவது தவறு செய்திருக்க வேண்டும் என்பது இல்லை’.
‘குணப்படுத்த முடியாத வியாதிக்கு குணங்கள் என்று பெயர்’.
– தமிழ்மகன்
நூல்: முன்மொழிகள்
ஆசிரியர்: காதல் சுகுமார்
மின்னங்காடி
விலை: ரூ. 95/-
நூலைப் பெற: 7299241264