“வாழ்க்கையில் ஒருவரைப் பற்றி ஒருவர் தங்களுக்குத் தெரிகின்ற ஒரே கோணத்திலிருந்து ஒரு பாகத்தை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து, அதுவே முழுமையான முடிவு என்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வாழ்க்கை என்பது எத்தனை கோணங்களில், எத்தனை பார்வைகளில் எப்படியெப்படியோ தெரிந்தாலும், ஏதோ ஒரு நியாயத்தின் அடிப்படையில் எல்லோரையும் சேர்த்து அணைத்துக் கொள்ளும் ஒரு முழுமை தானே.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு மாதிரியான குறை; உங்கள் குறைக்கு நானோ, என் குறைக்கு நீங்களோ தீர்வு காண முடியாது. தீர்வு காணவும் கூடாது”
‘கருணையினால் அல்ல’ என்ற நூலில் – ஜெயகாந்தன்.
#எழுத்தாளர்ஜெயகாந்தன் #writerjayakanthan #Jayakanthan #ஜெயகாந்தன்