படித்ததில் ரசித்தது:
ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார்.
சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர்.
புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம் நான் சொல்லப் போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு.
நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார், “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும்” என்று.
நன்றி: முகநூல் பதிவு.