வி.ஆர்.கிருஷ்ணய்யர்: நிராயுதபாணிகளுக்காக துடித்த இதயம்!

வழக்கறிஞர், பொதுநலவாதி, ஐக்கிய கேரளத்தின் முதல் உள்துறை சட்ட அமைச்சர், நீதிபதி, நீதியின் காவலன் என்று பல்வேறு நிலைகளில் ஒரு நூற்றாண்டு காலம் இந்திய சமூகத்தில் நிறைந்து நின்றவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

1938-ல் மலபார்-கூர்க் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தன் பணியைத் துவக்கியவர். விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் ஒன்றிணைப்பதில் பெரும்பங்காற்றினார்.

1948-ம் ஆண்டு, ‘கம்யூனிஸ்ட்களுக்கு சட்ட உதவிகள் செய்தார்’ என்ற வழக்கில் ஒருமாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1952-ல் கூத்துப்பறம்பு தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957-ல் ஐக்கிய கேரளத்தில் நடைபெற்ற முதல் தேர்தலில் இடதுசாரிகள் ஆதரவு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு தோழர் இ.எம்.எஸ். அமைச்சரவையில் சட்டம், உள்துறை, சிறைத்துறை, சமூகநலம், மின்சாரம், நீர்வளத்துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றினார்.

‘விமோசன சமரம்’ என்ற பெயரில், மத்திய காங்கிரஸ் அரசால் முதன்முதலாக தோழர் இ.எம்.எஸ் அமைச்சரவை கலைக்கப்பட்ட பின்பு…

1959-ம் ஆண்டு முதல் மீண்டும் வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தினார்.
1968-ல் உயர்நீதமன்ற வழக்கறிஞரானார்.
1970-ல் இந்திய சட்டக்கமிஷன் உறுப்பினரானார்.
1973-ம் ஆண்டு ஏழைகளுக்கு சட்ட உதவி வழங்குவது சம்பந்தமாக அமைக்கப்பட்ட மத்தியக்குழுவின் தலைவரானார்.
1973-ம் ஆண்டு ஜூலையில் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
1980-ம் ஆண்டு நவம்பர் 14 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
1987-ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் திரு ஆர்.வெங்கட்ராமனை எதிர்த்துப் போட்டியிட்டார்.

சட்டங்கள் குறித்த பல்வேறு நூல்கள் உட்பட 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். ‘வான்டரிங் இன் மெனி வேர்ல்டு’ என்ற சுயசரிதையும், 3 பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

1999-ல் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் ‘சட்ட உலகில் வாழும் சகாப்தம்’ என்ற விருது வழங்கி சிறப்பித்தது.

மூன்று பல்கலைகழகங்களில் இருந்து டாக்டர் பட்டமும், மேலும் பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

1915 நவம்பர் 15 அன்று கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வைத்தியநாதபுரத்தில் பிறந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

நேற்று (4-12-2014) மாலை எர்ணாகுளத்தில் உள்ள மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில், தனது நூறாவது வயதில் காலமானார்.

Comments (0)
Add Comment