ஆவணக் காப்பகத்தின் ஆகச் சிறந்த புகைப்படம்!

கவிஞர் அ. வெண்ணிலா நெகிழ்ச்சி

ஆவணக் காப்பகத்திற்கு இன்று காலை திரு பி.சி.ஸ்ரீராம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவருடைய கலைப் பார்வையில் ஆவணக் காப்பகம் பதிவாக வேண்டும் என்று மிகவும் விரும்பி அழைத்திருந்தேன்.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் அவசரமே இல்லாமல் ஆவணக் காப்பகத்தைப் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார்.

மாபெரும் கலையாளுமையான அவர் கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஆவணக் காப்பகத்தைப் பக்கவாட்டில் இருந்து தன்னுடைய கைபேசியில் புகைப்படங்கள் எடுத்தார். ஒரு புகைப்படத்தை அவருடைய எக்ஸ் தளத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

செவ்வண்ணக் கட்டடம், கட்டடத்தின் செவ்வண்ணத்தில் இருந்து பிரிந்து நிற்கும் அடர்நீல வானம், மேகத்துணுக்குகள் அருகில் வரவிடாதபடி பாதுகாத்து நிற்கும் மரக்கிளைகள், கிளைகளின் நிழல், உயரத்தில் கொடிக் கம்பமும் தெரிகிறது, கொடிக்கம்பத்தின் கீழ் சின்னத் தொட்டியில் இருக்கும் கற்றாழையும் கற்றாழைத் தொட்டியைப் பிடிக்கப் படரும் கொடி வரை தெரிகிறது அப்புகைப்படத்தில்.

அலைபேசி, அனைவர் கையிலும் இருக்கிறது. கலைஞன் கையில் இருக்கும் அலைபேசிக்கு மட்டும் இத்தனை மாயம் செய்யத் தெரிகிறது.

ஆவணக் காப்பகத்தின் ஆகச் சிறந்த புகைப்படம்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment