நீதி வெல்லட்டும்…!

கைதான கஸ்தூரி முழக்கம்

செய்தி:

தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

– அரசியல் அராஜகம் ஒழியட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டதால் பரபரப்பு.

கோவிந்த் கமெண்ட்:

தெலுங்கு மக்கள் குறித்து பேசியபோது அவ்வளவு தூரம் ஆவேசப்பட்டீர்கள். அதன்பின் செய்தியாளர்கள் கூட்டத்தில் அதை நியாயப்படுத்தும் விதத்தில் பேசினீர்கள். பின்பு வழக்கம்போல பலர் தலைமறைவாவதைப்போல நீங்களும் தலைமறைவானீர்கள்.

தமிழகக் காவல்துறை தனிப்படை அமைத்து உங்களைத் தேடினார்கள். எந்த தெலுங்கு மக்களைப் பற்றி நீங்கள் எதிர்த்துப் பேசினீர்களோ, அதே தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் ஹைதராபாத் அருகில் உள்ள பப்பலக்குடா பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.

சென்னையில் உள்ள நீதிமன்றத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த நிலையிலும் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு, “அரசியல் அராஜகம் ஒழியட்டும், நீதி வெல்லட்டும்” என்று பழைய ஆவேசத்தோடு குரல் கொடுத்திருக்கிறீர்கள் தானே.

அநாகரீகமாகப் பேசி மாட்டிக்கொண்ட பிறகு யாருக்கான நீதி வெல்லட்டும் என்பதை கூடவே உங்கள் பாணியில் சொல்லிவிடுங்கள்.

கேட்பவருக்கும் தலை சுற்றாமல் இருக்கும்.

Comments (0)
Add Comment