பாரதி கிருஷ்ணகுமார் வடிவமைத்த கலை இலக்கிய இரவுகள்!

பிரபாகர்

படித்துறை இலக்கிய விருது பெற்ற பாரதி கிருஷ்ணகுமார் பற்றி “BK எனும் பேரற்புதம்” எனும் தலைப்பில் ஃபிலிம் ரைட்டர் பிரபாகர் எழுதிய கட்டுரை.

BK ஒரு கலை இரவு என்பது என்னவாக நிகழவேண்டும் என்ற துல்லியமான வடிவத்தை பல வருடங்களாகவே மனதில் வடிவமைத்துக்கொண்டு இருந்திருக்கிறார். கலை இரவு மேடை எப்படி இருக்கவேண்டும்?

(மேடையில் யாரும் இருக்க கூடாது. பெரிய மேடையில் ஒரே ஒரு மைக் மட்டுமே இருக்க வேண்டும். பேசுகிறவர் அல்லது பாடுகிறவர் மட்டும் மேடை ஏறி நிற்க வேண்டும்).

மேடையின் பின்னணி என்னவாக வேண்டும். அதில் என்ன மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். இவைகளை வரைந்து காட்டி விளக்கினார்.

பேசுவதற்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டும். பாடுவதற்கு யாரை அழைக்க வேண்டும். வேறு என்ன நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்? யாரை பாராட்ட வேண்டும்? நிதி வசூல் எப்படி செய்ய வேண்டும். விளம்பரங்கள் எப்படி செய்யவேண்டும். (கலை இரவின் விளம்பரங்கள் இன்றும் தனித்துவமானவை, BK எங்களுக்கு அதை வரைந்து காட்டினார்)

எத்தனை மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்து காலை எத்தனை மணி வரை அது போக வேண்டும். எத்தனை மணி நேர இடைவெளிக்கு இடையே ஒரு பேச்சாளரை மேடையில் ஏற்ற வேண்டும்.

இடையில் என்ன நிகழ வேண்டும் என்றெல்லாம் ஐந்து நிமிட இடைவெளிகூட இல்லாத அந்த கலை இரவு வடிவத்தை இரவெல்லாம் பேசினார். அந்த கலை இரவின் வடிவமே அடுத்த பத்தாண்டுகள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் நிகழ்ந்தது.

BK- வின் ஒரு மேடைப்பேச்சை கேட்டாலே நூறு புத்தகங்கள் படித்த அறிவு உண்டாகிவிடும். நான் BK வின் நூறு மேடைப்பேச்சுகளுக்கு மேல் கேட்டிருக்கிறேன். நான் பத்தாயிரம் புத்தகங்களைப் படித்தவன் போல்தான் உணர்கிறேன்.

BK அழகான எழுத்தில் கடிதங்கள் எழுதுவார். மிக நேர்த்தியாக உடை உடுத்துவார். இரவு எத்தனை மணிக்கு தூங்கினாலும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வாசிக்கத்துவங்கிவிடுவார்.

எப்பொழுதும் நண்பர்கள் சூழ இருப்பார். சிறந்த உணவை நண்பர்களுடன் தேடிச் சென்று உண்ணுவார். அவரைப் போல தன்னுடைய வாழ்க்கைய அமைத்துக்கொண்ட சில நூறு பேர்கள் தமிழகத்தில் உண்டு.

BK மேடைகளில் மட்டும் அல்ல. பலர் வாழ்விலும் நிகழ்ந்த அற்புதம். வெகு நிச்சயமாக என் வாழ்வில் நிகழ்ந்த பேரற்புதம் என்று BK-வைச் சொல்வேன்.

நன்றி: பேஸ்புக் பதிவு

Comments (0)
Add Comment