சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது!

நடிகர் சிவாஜி கணேசன்

சக்தி கிருஷ்ணசாமியிம் ம.பொ.சி. எழுதிய புத்தகம் பற்றிக் குறிப்பிட்டு, அதையொட்டி கட்டபொம்மன் நாடகத்தை எழுதும்படிக் கேட்டுக்கொண்டார் சிவாஜி.

சிவாஜியின் விருப்பத்தை நிறைவேற்ற 30 நாட்களில் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ நாடகத்தை எழுதி முடித்தார் சக்தி கிருஷ்ணசாமி.

திரையில் தனக்குக் கிடைத்த ஊதியத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து பிரம்மாண்ட செட்களுக்கும் உடைகளுக்கும் செலவு செய்யும்படி சொன்னார் சிவாஜி.

1957, ஆகஸ்ட் 29-ஆம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக அரங்கேறியது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகம்.

அரங்கேற்றதுக்கு சின்ன அண்ணாமலையும் சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் அழைக்கப்பட்டார்கள். சக்தி கிருஷ்ணசாமியின் அனல் வசனங்களைக் கேட்டு ம.பொ.சி. மனதாரப் பாராட்டினார்.

1959-ல் வெளியானது வீரபாண்டிய கட்டபொம்மன். காட்சியமைப்புகளாலும் வசனங்களாலும் இன்றளவும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றதுமே நம் கண்முன்னே நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான் தோன்றுவார்.

கட்டபொம்மன் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்தவர் பி.ஆர்.பந்தலுதான்.

‘சக்தி கிருஷ்ணசாமியைப்போல் யாராலும் சிறந்த வசனங்களை எழுத முடியாது’ என தன்னுடைய சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி கணேசன். 

படப்பிடிப்பிற்காக எகிப்திற்கு சென்றபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வசன கர்த்தா சக்தி கிருஷ்ணசாமி, இயக்குநர் பி.ஆர்.பந்துலு எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Comments (0)
Add Comment