செய்தி:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புப்படுத்திப் பேசியதற்காக, அவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவதூறாகப் பேட்டி கொடுத்தவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறைப் பரப்பியதாக கொடநாடு வழக்கில் மர்மமாக இறந்ததாகச் சொல்லப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
இந்த சமயத்தில் ஒரு எளிய கேள்வி.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மர்மமான முறையில் இறந்தது 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி. அது குறித்து இறந்த கனகராஜின் சகோதரரான தனபால் பேட்டி கொடுத்தது 2023-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி.
ஓராண்டுக்கு முன் அவதூறு எழுப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் மிக விரைவாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.
ஆனால், 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளைகளுக்கும் தொடர்ந்து மர்மமாக நடந்த அடுத்தடுத்த உயிரிழப்புகளுக்குமான வழக்கு விசாரணை முடித்து எப்போது தான் தீர்ப்பு வரும்?
கொடநாடு வழக்கில், சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் எப்போதுதான் பிடிபடுவார்கள்?