உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியல்:
*விருமாண்டி (2004)
இயக்கம்: கமல்ஹாசன், கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன், ஒளிப்பதிவு: கேசவ் பிரகாஷ், படத்தொகுப்பு: ராம் சுதர்சன், கமல்ஹாசன், இசை: இளையராஜா, தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்.
வெளியான தேதி: ஜனவரி 14, 2004,
நடிப்பு: கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன், நாசர், ரோகிணி, சண்முகராஜன், எஸ்.என்.லட்சுமி, காந்திமதி, பாலாசிங், ஓ.ஏ.கே.தேவர், ராஜேஷ், சுஜாதா சிவகுமார், பெரியகருப்பு தேவர், பிரமிட் நடராஜன், தென்னவர், ஜி.ஞானசம்பந்தன் உட்படப் பலர்
*வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் (2004)
திரைக்கதை, இயக்கம்: சரண், கதை: ராஜ்குமார் ஹிரானி, வசனம்: கிரேஸி மோகன், ஒளிப்பதிவு: ஏ.வெங்கடேஷ், படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ், இசை: பரத்வாஜ், தயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்
வெளியான தேதி: ஆகஸ்ட் 15, 2004,
நடிப்பு: கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், ரோகிணி ஹட்டாங்காடி, கிரேஸி மோகன், காகா ராதாகிருஷ்ணன், ஜெயசூர்யா, மாளவிகா, கருணாஸ், அஜய் ரத்னம், கவிதாலயா கிருஷ்ணன், தலைவாசல் விஜய், சந்தானபாரதி, வையாபுரி, மதன் பாப், மீரா கிருஷ்ணன், ரகஸ்யா உட்படப் பலர்
*மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
இயக்கம்: சிங்கிதம் சீனிவாச ராவ், கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன், ஒளிப்பதிவு: சித்தார்த் ராமஸ்வாமி, படத்தொகுப்பு: அஷ்மித் குந்தர், இசை: இளையராஜா, தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியான தேதி: ஏப்ரல் 14, 2005
நடிப்பு: கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, நாசர், சந்தான பாரதி, ரமேஷ் அரவிந்த், பசுபதி, சரத் சக்ஸேனா, கோவை சரளா, வையாபுரி, தீனா, ரஸா முராத் உட்படப் பலர்
*மும்பை எக்ஸ்பிரஸ் (2005) (இந்தி)
இயக்கம்: சிங்கிதம் சீனிவாச ராவ், கதை, திரைக்கதை: கமல்ஹாசன், வசனம்: சவுரஃப் சுக்லா, ஒளிப்பதிவு: சித்தார்த் ராமஸ்வாமி, படத்தொகுப்பு: அஷ்மித் குந்தர், இசை: இளையராஜா, தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியான தேதி: ஏப்ரல் 15, 2005
நடிப்பு: கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஓம்பூரி, சவுரஃப் சுக்லா, ரமேஷ் அரவிந்த், விஜய் ராஸ், சரத் சக்ஸேனா, பிரதிமா கஸ்மி, தினேஷ் லம்பா, ரஸா முராத் உட்படப் பலர்
*ராமா ஷாமா பாமா (2005) (கன்னடம்)
இயக்கம்: ரமேஷ் அரவிந்த், கதை: யஷ்வந்த் சர்தேஷ்பாண்டே, வசனம்: ராஜேந்திர கரந்த், திரைக்கதை: ரமேஷ் அரவிந்த், மூலக்கதை: பாலு மகேந்திரா, ஒளிப்பதிவு: பி.கே.ஹெச்.தாஸ், படத்தொகுப்பு: நாகேந்திரா அர்ஸ், இசை: குருகிரண், தயாரிப்பு: லக்ஷ்மிஸ்ரீ கம்பைன்ஸ்
வெளியான தேதி: டிசம்பர் 9, 2005
நடிப்பு: ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, ஸ்ருதி, டெய்ஸி போபண்ணா, கமல்ஹாசன், அனிருத்த ஜட்கர், ஹெச்.ஜி.தத்தாத்ரேயா, மணிகந்த சூர்யா, பிரதிமா தேவி, யஷ்வந்த் சர்தேஷ்பாண்டே உட்படப் பலர்
*வேட்டையாடு விளையாடு (2006)
இயக்கம்: கௌதம் வாசுதேவ் மேனன், கதை, திரைக்கதை, வசனம்: கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவு: ரவி வர்மன், படத்தொகுப்பு: ஆண்டனி, இசை: ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பு: செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ்
வெளியான தேதி: ஆகஸ்ட் 25, 2006
நடிப்பு: கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், ராஜஸ்ரீ, டேனியல் பாலாஜி, சலீம் பைஹ், யோக் ஜேப்பி, ஆகுதி பிரசாத், ஜானகி சபேஷ், லியோ கார்ன், ராஜிவ் சவுத்ரி, சுதாகர், ஸ்டன் சிவா உட்படப் பலர்
*தசாவதாரம் (2008)
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார், கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன், ஒளிப்பதிவு: ரவி வர்மன், படத்தொகுப்பு: கே.தணிகாசலம், பாடல்கள் இசை: ஹிமேஷ் ரேஷமய்யா, பின்னணி இசை: தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பு: ஆஸ்கார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியான தேதி: ஜுன் 13, 2008
நடிப்பு: கமல்ஹாசன், அசின், ஜெயபிரதா, மல்லிகா ஷெராவத், ரேகா, கே.ஆர்.விஜயா, நெப்போலியன், ரகுராம், நாகேஷ், சக்ரி தொலாட்டி, ஷம்மு, ரமேஷ் கன்னா, எம்.எஸ்.பாஸ்கர், பி.வாசு, சந்தானபாரதி, ஆர்.சுந்தர்ராஜன், சிட்டிபாபு, வையாபுரி உட்படப் பலர்
*உன்னைப்போல் ஒருவன் (2009)
இயக்கம்: சக்ரி தொலாட்டி, கதை: நீரஜ் பாண்டே, திரைக்கதை: நீரஜ் பாண்டே, கமல்ஹாசன், இரா.முருகன், ஒளிப்பதிவு: மனோஜ் சோனி, படத்தொகுப்பு: ராமேஸ்வர் பகத், இசை: ஸ்ருதி ஹாசன், தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியான தேதி: செப்டம்பர் 18, 2009
நடிப்பு: கமல்ஹாசன், மோகன்லால், கணேஷ் வெங்கட்ராமன், லட்சுமி, பரத் ரெட்டி, அனுஜா ஐயர், பூனம் கவுர், சந்தானபாரதி, பிரேம், ஆர்.எஸ்.சிவாஜி, ஸ்ரீமன், சரத் மாண்டவா, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உட்படப் பலர்
*மன்மதன் அம்பு (2010)
இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார், கதை, திரைக்கதை: கமல்ஹாசன், வசனம்: கிரேஸி மோகன், ஒளிப்பதிவு: மனுஷ் நந்தன், இசை: தேவிஸ்ரீ பிரசாத், தயாரிப்பு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்
வெளியான தேதி: டிசம்பர் 23, 2010
நடிப்பு: கமல்ஹாசன், த்ரிஷா, ஆர்.மாதவன், சங்கீதா, ஓவியா, ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, குஞ்சன், மஞ்சு பிள்ளை, உஷா உதூப், ஸ்ரீமன், கரோலின் ஃப்யூரியோலி உட்படப் பலர்
*விஸ்வரூபம் (2013)
இயக்கம்: கமல்ஹாசன், கதை, வசனம்: கமல்ஹாசன், திரைக்கதை: கமல்ஹாசன், சக்ரி தொலாட்டி, அதுல் திவாரி, ஒளிப்பதிவு: சானு வர்கீஸ், படத்தொகுப்பு: மகேஷ் நாராயண், இசை: சங்கர் – இஷான் – லாய், தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியான தேதி: ஜனவரி 25, 2013 (தமிழ்நாட்டில் பிப்ரவரி 7, 2013 அன்று வெளியானது)
நடிப்பு: கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மையா, ராகுல் போஸ், சேகர் கபூர், ஜெய்தீப் அலாவத், சம்ரட் சக்ரபர்த்தி, நாசர், ஜரீனா வஹாப், மைல்ஸ் ஆண்டர்சன் உட்படப் பலர்
*உத்தம வில்லன் (2015)
இயக்கம்: ரமேஷ் அரவிந்த், கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன், ஒளிப்பதிவு: ஷம்தத் சைனுதீன், படத்தொகுப்பு: விஜய் ஷங்கர், இசை: கிப்ரான், தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா
வெளியான தேதி: மே 2, 2015
நடிப்பு: கமல்ஹாசன், ஊர்வசி, பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மையா, கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம், பார்வதி திருவோத்து, நாசர், சண்முகராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஜி.ஞானசம்பந்தன், வையாபுரி, தீபா ராமானுஜம், பார்வதி நாயர், பிரகாஷ் பெலவாடி, சித்ரா லட்சுமணன் மற்றும் பலர்
*பாபநாசம் (2015)
இயக்கம்: ஜீத்து ஜோசப், கதை, திரைக்கதை: ஜீத்து ஜோசப், வசனம்: ஜெயமோகன், ஒளிப்பதிவு: சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பு: அயூப்கான், இசை: கிப்ரான், தயாரிப்பு: வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராகுமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெளியான தேதி: ஜூலை 3, 2015
நடிப்பு: கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில், ஆனந்த் மகாதேவன், ஆஷா சரத், ரோஷன் பஷீர், கலாபவன் மணி, இளவரசு, டெல்லி கணேஷ், சாந்தி வில்லியம்ஸ், சார்லி, வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ஸ்ரீராம், அபிஷேக் வினோத் உட்படப் பலர்
*தூங்காவனம் (2015)
இயக்கம்: ராஜேஷ் எம்.செல்வா, கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன், மூலக்கதை: ஃப்ரெடரிக் ஜார்தின், ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ், படத்தொகுப்பு: ஷான் முகம்மது, இசை: கிப்ரான், தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஸ்ரீ கோகுலம் மூவிஸ்
வெளியான தேதி: நவம்பர் 10, 2015
நடிப்பு: கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத் ராஜ், யூகிசேது, ஆஷா சரத், அமன் அப்துல்லா, மது ஷாலினி, ஜெகன், உமா ரியாஸ் கான், குரு சோமசுந்தரம், சந்தானபாரதி, ராமஜோகய்யா சாஸ்திரி, சாம்ஸ், சுகா உட்படப் பலர்
*விஸ்வரூபம் 2 (2018)
இயக்கம்: கமல்ஹாசன், கதை, வசனம்: கமல்ஹாசன், திரைக்கதை: கமல்ஹாசன், சக்ரி தொலாட்டி, அதுல் திவாரி, ஒளிப்பதிவு: சானு வர்கீஸ், சம்தத் சைனுதீன், படத்தொகுப்பு: மகேஷ் நாராயண், விஷ்ணு ஷங்கர், இசை: கிப்ரான், தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்
வெளியான தேதி: ஆகஸ்ட் 10, 2018
நடிப்பு: கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெர்மையா, ராகுல் போஸ், சேகர் கபூர், ஜெய்தீப் அலாவத், ரஸ்ஸல் ஜெஃப்ரி பேங்க்ஸ், வகீதா ரஹ்மான், ஆனந்த் மகாதேவன், மிர் சர்வார், தீபக் ஜேத்தி உட்படப் பலர்
*விக்ரம் (2022)
இயக்கம்: லோகேஷ் கனகராஜ், கதை, திரைக்கதை, வசனம்: லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவு: கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பு: பிலோமின் ராஜ், இசை: அனிருத், தயாரிப்பு: : ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்
வெளியான தேதி: ஜுன் 3, 2022
நடிப்பு: கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி, இளங்கோ குமரவேல், வசந்தி, சுவாதிஷ்டா கிருஷ்ணன், கௌதம் சுந்தர்ராஜன், ஜி.மாரிமுத்து, அருள்தாஸ், மைனா நந்தினி, மகேஸ்வரி, ஷிவானி நாராயண், கஜராஜ் உட்படப் பலர்.
*இந்தியன் – 2 (2024)
இயக்கம்: ஷங்கர், கதை – ஷங்கர், ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணக்குமார், தயாரிப்பு – லைக்கா நிறுவனம், இசை – அனிருத், ஒளிப்பதிவு – ஆர். ரத்னவேலு, படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்.
வெளியான தேதி: ஜூலை – 12, 2024
நடிப்பு: கமல்ஹாசன், நெடுமுடி வேணு, விவேக், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, மனோபாலா, டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.