தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி!

செய்தி: 

தெலுங்கு தேச மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்ட நடிகை கஸ்தூரி!

கோவிந்த் கமெண்ட்:

சிலருக்கு மைக்கிற்கு அருகில் வந்ததுமே தனி ஆவேசம் வந்துவிடுகிறது. அதிலும் தொலைக்காட்சி மைக்குகள் அதிகமாக இருந்தால், சிலரது ஆவேசமும் அதிகபட்டு விடுகிறது. அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

அவர் இதற்கு முன்பும் சில தடவை இதே விதமான சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து சலசலப்பு ஏற்படுத்திய அனுபவம் உள்ளவர்தான்.

தற்போது தெலுங்கு தேச மக்கள் குறித்து அவர் ஊடகங்களுக்கு முன்னால் பேசியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பேசியது தெலுங்கு தேச மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால், மறுபடியும் ஊடகங்களை அழைத்து தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதற்குள் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த சமயத்தில் கஸ்தூரியிடம் நாம் கேட்பது மிக எளிய கேள்விதான். தமிழில் ‘நா-காக்க’ என்ற சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுவது கஸ்தூரிக்கு தெரிந்திருக்கும்.

அதைப் போலவே கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரியானா, ‘சொல்லாத சொல்லுக்கு விடை ஏதுமில்லை’ என்பதும் கூட தெரிந்திருக்கலாம்.

ஊடகப் பரபரப்புக்காக பேசி அதற்கான வினையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி.

Comments (0)
Add Comment