பிகாசோவின் வெற்றி ரகசியம்!

கலை விமர்சகர் இந்திரன்
"கலை சாதனைக்கு கற்பனை மட்டும் போதாது கடின உழைப்பும் தேவை."
- பாப்லோ பிகாசோ

90 வயது வரை வாழ்ந்த நவீன ஓவியர் பாப்லோ பிகாசோ தொடர்ந்து கலை படைப்பில் ஈடுபட்டுக் கொண்டே வந்தார்.

“Inspiration exists, but it has to find us working.” இன்னும் இந்த வார்த்தைகள் தான் பிகாசோவின் சாரம் என்று நான் நினைக்கிறேன்.

கலைப் படைப்பு குறித்த உணர்வெழுச்சி மட்டும் போதாது. படைப்புத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

1881-ல் ஸ்பெயினில் பிறந்த இவர் பாரிஸ் நகரத்திற்கு வந்து வாழ்நிலைக்கு போராடிக் கொண்டிருந்த போதும் தினந்தோறும் ஓவியம் சிற்பங்களை செய்து கொண்டே வந்தார். இதுதான் பிகாசோவின் வெற்றி ரகசியம்.

துணிச்சலுடன் பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டார். இதுவே இவர் ஓவியக் கலையில் க்யூபிசம் என்பதை அறிமுகப்படுத்த காரணமாக அமைந்தது.

1907-ல் இவரது Les Demoiselles d’Avignon எனும் ஓவியத்தில் இவர் செய்த புரட்சி திடீரென தோன்றியது அல்ல.

நூற்றுக்கணக்கான கோட்டுச்சித்திரங்களை வரைந்து பார்த்த பிறகுதான் இந்த ஓவியத்தை அவரால் தீட்ட முடிந்தது.

ஆப்பிரிக்க சிற்பங்களையும் முகமூடிகளையும் பாரிஸ் நகரத்து லூவர் அருங்காட்சியகத்தில் பார்த்த பிறகு பிகாசோ மேற்கொண்ட ஓய்வில்லாத பரிசோதனை முயற்சிகள் மாபெரும் பலன்களை அளித்தன.

உலகப் புகழ்பெற்ற பிறகும், ஏராளமான பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலை படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

Comments (0)
Add Comment