நூல் அறிமுகம்: புகழ்பெற்ற கவிஞர்கள்!
ஒன்பது புகழ்பெற்ற சிறப்பான கவிஞர்கள் குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் அவர்கள் செய்த பணி குறித்தும் அடைந்த வெற்றிகள் குறித்தும் சாதனைகள் குறித்தும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது ‘புகழ்பெற்ற கவிஞர்கள்’ என்கிற இந்தப் புத்தகத்தில்.
தமிழில் சிறந்த பெருங்கவிஞர்களாகப் புகழ்பெற்று விளங்கிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், பட்டுக்கோட்டையார், அழ.வள்ளியப்பா, மாயூரம் வேதநாயகம் பிள்ளை மற்றும் கண்ணதாசன் ஆகியோரைப் பற்றி இந்நூலில் புதிய பல கருத்து சித்திரங்கள் அழகுற தீட்டப்பெற்றுள்ளன.
குழந்தைகளுக்காக எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் ஆசிரியர் ஜெயந்தி நாகராஜன். முனைவர் பட்டம் பெற்றவர்.
மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் மேனாள் பேராசிரியை, மூத்த பத்திரிகையாளர், உரத்த சிந்தனை ஜீவி விருது, காஞ்சி காமகோடி பீடாதிபதி சேவாரத்னா விருது, வள்ளியப்பா இலக்கிய விருது, அமரர் கே.ஆர். வாசுதேவன் விருது, மன்னை பாசந்தியின் வரலாற்றுச் செம்மல் விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் எழுத்துச் சுடர் விருது பெற்ற பெருமைக்குரியவர்.
இவரது இலக்கிய நாடகம், புராண நாடகம் நூல்கள் பல தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடமாக உள்ளன.
இவரது ‘அம்மா தந்த பொம்மை’ எனும் மழலையர் பாடல், முதல் வகுப்பிற்குப் பாடமாக உள்ளது. ஜெயந்தி சிறுவர் சங்க அமைப்பையும் நடத்தி வருகிறார்.
**********
நூல் : புகழ்பெற்ற கவிஞர்கள்!
ஆசிரியர் : ஜெயந்தி நாகராஜன்
அறிவு பதிப்பகம்
பக்கங்கள்: 116
விலை: ரூ. 90/-