செய்தி:
“பணவீக்கத்தை மிகத் திறமையாகக் கையாண்டது இந்தியா!” – கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.
கோவிந்த் கமெண்ட்:
வெளிநாடுகளில் எல்லாம் போய் அதிலும் குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்லாம் பணவீக்கம் பற்றி குறிப்பிட்டு மிக திறமையாகக் கையாண்டதாக சர்டிபிகேட் கொடுத்திருக்கிறீர்கள்.
ஆனால், தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும் அண்மையில் கோயம்புத்தூரில் இதே பணவீக்கத்தைப் பற்றி குறிப்பாக, ஜிஎஸ்டி பற்றி ஒரு ஓட்டல் அதிபர் நேரடியாக பட்டவர்த்தனமாக உங்களிடம் சொன்னபோது மட்டும் ஏன் நீங்கள் பெருமிதம் கொள்ளவில்லை?