செய்தி:
அண்மையில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.
கோவிந்த் கமெண்ட்:
எந்த விழாவில் ஆளுநர் கலந்துகொண்டாலும், அந்த விழாவைப் பரப்பரப்புக்குரிய செய்தியாக அடிபட வைப்பதே அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
தற்போது, “இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்” என்கின்ற குற்றச்சாட்டை, ஒரு மாநில ஆளுநரே முன் வைத்திருக்கிறார்.
அதே சமயத்தில், அவர் கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தையேத் திருத்தி, அதாவது தணிக்கை செய்து பாட வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக ‘திராவிடம்’ என்கின்ற சொல்லை அகற்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட வைத்திருக்கிறார்கள்.
இப்படித் தமிழ்த்தாய் வாழ்த்திலேயே தணிக்கை செய்து துண்டிக்கும் ஒரு ஆளுநர், “இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டிக்கப் பார்க்கிறார்கள்” என்று பேசலாமா?
சற்றே திரும்பி தன்னுடைய பிம்பத்தையும் அவர் சரி செய்யட்டும்.