செய்தி:
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 1992-ம் ஆண்டு, தங்க சிவலிங்கம், தங்க அங்கி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயின. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவிலில் மாயமானதாகக் கூறப்படும் தங்க சிவலிங்கம் உள்ளிட்ட நகைகளை சரி பார்க்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவிந்த் கமெண்ட்
எதாவது நடந்தால் எல்லாம் சிவமயம் என்பார்கள். இப்போது சிவலிங்கமே மாயமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி, அதை ஆய்வுசெய்ய தனி நீதிபதியையே நியமிக்க வேண்டி இருக்கிறது.
எல்லாம் சிவமயம், அன்பே சிவம் என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்?